NATIONAL

இந்தியர்களின் வளர்ச்சி திட்டத்திற்கு 72 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு – மித்ரா

புத்ராஜெயா, ஜூன் 7: நாட்டில் இந்தியர்கள் அதிகம் உள்ள 72 தொகுதிகளில் செயல்படும் மக்கள் சேவை மையங்களுக்கு 72 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்நிதி வழி மனித மேம்பாடு உட்பட மேலும் பல திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு மித்ராவின் சிறப்பு செயற்குழு தலைவர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் அறிவித்தார்.

மித்ராவின் இந்த முயற்சியில் இந்திய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் தொழில்முனைவோர் மற்றும் தொழில் சமுதாயம் மக்கள் நலன் சமயம் நல்வாழ்வு ஆகிய கூறுகளின் அடிப்படையிலான தேவைகளும் மேம்பாடுகளும் அடங்கும்.

மித்ராவும் வெஸ்தா ஏவியேசன் சேர்விஸூம் இணைந்து 100 இந்திய இளைஞர்களுக்கு விமானப் போக்குவரத்து துறையில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 21 மாதங்கள் நடைபெறும் இந்த பயிற்சி திட்டத்தில் 9 மாதங்களுக்கு கல்வி போதனையும் 12 மாதங்களுக்குப் பயிற்சியும் வழங்கப்பட்டு சான்றிதழ் கொடுக்கப்படுவதுடன் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் என்று ரமணன் கூறினார்.

மேலும், அந்த நிதி ஒதுக்கீட்டில் ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானத்தை இயக்கும் தொழில்நுட்பத் திட்டமும் 527 தமிழ்ப்பள்ளிகளுக்கு 6,000 மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்த விருப்பம் ரமணன் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் சேவை மையத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் இலக்கிடப்பட்ட சமூகப் பொருளாதார மேம்பாட்டு திட்டம் பேராக் கின்தா சிலாங்கூர் பெட்டாலிங் மற்றும் ஜொகூர் பாரு ஆகிய பகுதிகளில் மேற்கொள்ள படவிருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் இந்திய மக்களின் சமூகப் பொருளாதார நிலையை உயர்த்துவதற்காக 2 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.


Pengarang :