NATIONAL

ஜனவரி முதல் ஜூன் வரை நாட்டில் 24,240 சட்டவிரோதக் குடியேறிகள் கைது

கோலாலம்பூர், ஜூன் 9- இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை நாடு முழுவதும்
மேற்கொள்ளப்பட்ட தொடர் சோதனைகளின் வாயிலாக 24,240 சட்டவிரோத அந்நியக் குடியேறிகளை மலேசிய குடிரநுழைவுத் துறை கைது செய்துள்ளது.

இக்காலக்கட்டத்தில் 3,617 அதிரடி நடவடிக்கைகளையும்  சோதனைகளையும் 40,450
சோதனைகளையும் தமது துறை மேற்கொண்டதாக  குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ருஸ்லின் ஜூசோ கூறினார்.

சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கமர்த்தியது மற்றும் அடைக்கலம் வழங்கியது தொடர்பில் 145 முதலாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.

சட்டவிரோத அந்நிய நாட்டினர் அடிக்கடி கூடும் இடங்களை அடையாளம்
காண்பதற்கு ஏதுவாக உளவு நடவடிக்கைள் மற்றும் கண்காணிப்பை அதிகரிப்பது
உள்ளிட்ட நடவடிக்கைகளைக் குடிநுழைவுத் துறை தொடர்ந்து மேற்கொண்டு
வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :