SELANGOR

மறுசுழற்சி பொருட்களைக் கொடுத்து சுற்றுச்சூழல் இலவசச் சந்தையில் பொருட்களைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பு – சுபாங் ஜெயா நகராண்மை கழகம்

ஷா ஆலம், ஜூன் 12: ஜூன் 17 அன்று சுபாங் ஜெயாவில் உள்ள டத்தாரான் பஜார் யுஎஸ்ஜே 7 இல் நடைபெறும் ஜோம் கித்தார் செமுலா திட்டத்தில், மறுசுழற்சி செய்ய பயன்படும் பொருட்களைக் கொடுத்து சுற்றுச்சூழல் இலவசச் சந்தையில் பொருட்களைப் பெற்று கொள்ள மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு காலை 8.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு மறுசுழற்சி பொருட்களை அனுப்புவதற்கு முன் அவை வகைக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு  நேர்த்தியாகக் கட்டிருக்க வேண்டும் என சுபாங் ஜெயா நகராண்மை கழகம் தெரிவித்துள்ளது.

“இத்திட்டம் நடைபெறும் நாளில், மக்கள் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களைக் கொடுத்து சுற்றுச்சூழல் இலவசச் சந்தையில் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம்,” என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

காகிதம், பெட்டிகள், பிளாஸ்டிக், இரும்பு, மின் கழிவுகள், பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய், துணிகள், திரைச்சீலைகள் மற்றும் தரைவிரிப்புகள் போன்ற பொருட்களை மறுசுழற்சி செய்ய கொடுக்கலாம்.

மேலும் தகவலுக்குப் பொதுமக்கள் சுபாங் ஜெயா நகராண்மை கழகச் சுற்றுச்சூழல் மேலாண்மை துறையை 03-8026 4366 அல்லது 03-8026 4420 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :