SELANGOR

அபராதம் வழங்குவதில் டிஜிட்டல் முறை – உலு சிலாங்கூர் நகராண்மை கழகம்

ஷா ஆலம், ஜூன் 15: உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் (எம்பிஎச்எஸ்) அதன் உற்பத்தித் திறன் மற்றும்  ஆற்றலை  மேம்படுத்தும்  ரீதியில்   சோதனை நடவடிக்கைகளின் போது வழங்கப்படும் அபராதத்தை  டிஜிட்டல் முறைக்கு மேம்படுத்தியுள்ளது.

டிஜிட்டல் மயமாக்கல் சேவைகள் தொடர்பான மாநில அரசின் கொள்கைக்கு இணங்க, கடந்த பிப்ரவரி 1 முதல் இந்த முறை அமலுக்கு வந்த என உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் அறிவித்துள்ளது.

“இந்த முறை மிகவும் பயனுள்ளதாகவும், ‘கையில் உள்ள எலக்ட்ரானிக் சாதனங்களின் வழி எளிதாகவும் வழங்க முடியும். மேலும், சட்ட அமலாக்க அதிகாரிகள் தங்கள் கடமைகளை அதாவது உரிமம் ஆய்வுகள், அபராதம் வழங்குதல் மற்றும் குற்றங்களுக்கு ஏற்ப நோட்டீஸ் வழங்குதல் போன்ற நடவடிக்கையில் ஈடுபடும் போது இந்த டிஜிட்டல் முறை மிகவும் உதவியாக உள்ளது.

“இந்த டிஜிட்டல் முறையில் தகவல்களை பதிவு செய்வதற்கும் அச்சிடுவதற்கும் தேவைப்படும் நேரத்தை குறைக்கலாம்” என்று முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டது.

இ-பில்லிங் (எம்பிஹெச்எஸ் போர்டல்), பிபிடி பே (கேபிகேடி) மற்றும் சிட்டிசன் இ-பேமென்ட் (சிபேட்) மூலம் மக்கள் இணையம் வழி அபராதத்தை செலுத்துவதை இந்த முறை எளிதாக்குகிறது.


Pengarang :