SELANGOR

புதிய வடிகால் கட்டுவதற்காக RM26,000 தேவை – பத்தாங் காலி தொகுதி

ஷா ஆலம், ஜூன் 16: கம்போங் கெந்திங் மாலேக்கில் வெள்ளப் பிரச்சனையைச் சமாளிக்க வடிகால் பழுதுபார்க்கும் மற்றும் புதிய வடிகால் கட்டுவதற்கு RM26,000 செலவாகும் என்று பத்தாங் காலி தொகுதி ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.

உலு சிலாங்கூர் நில மாவட்ட அலுவலகத்தால் முன்மொழியப்பட்ட செலவில் சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் (PSP) கீழ் 70 மீட்டர் வடிகால் கட்டுமானமும் அடங்கும் என்று சைஃபுடின் ஷாபி முஹம்மது கூறினார்.

“இந்த வடிகால் மேடான பகுதிகளில் இருந்து வரும் நீரை நேரடியாக நீர்த்தேக்கத்துக்கு பின்னர் ஆற்றுக்கும் கொண்டு செல்லும். இதன் மூலம் அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

ஜூன் 14 அன்று, உலு சிலாங்கூர் கம்போங் கெந்திங் மாலேக் மற்றும் கம்போங் சுங்கை கமின் ஆகிய இடங்களில் வடிகால் கட்டுமானப் பகுதியைச் சைஃபுடின் ஆய்வு செய்தார்.

அதே அறிக்கையில், கம்போங் சுங்கை கமினில் 300 மீட்டர் நீளத்திற்கு 50,000 ரிங்கிட் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் PSP1 திட்டம் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“2020 முதல் விண்ணப்பித்து வரும் நிலையில் பக்சிக் மாட்டின் குடியிருப்புக்குப் புதிய நுழைவாயில் கட்ட முடிந்தது,” என்று அவர் குறிப்பிட்டார்.

மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிய சிலாங்கூர் அரசுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.


Pengarang :