SELANGOR

ஹஜிபெருநாளுக்கு முந்தைய இரு தினங்களில் மாநில அரசின் மலிவு விற்பனை

ஷா ஆலம், ஜூன் 16- ஹஜி பெருநாளுக்கு முந்தைய இரு தினங்களில்
கூடுதலாக 18 இடங்களில் அத்தியாவசியப் பொருள் மலிவு விற்பனையை
நடத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

ஜூவாலான் ஏசான் ரஹ்மாட் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் இந்த மலிவு
விற்பனையின் வழி பெருநாளின் போது நியாயமான விலையில்
பொருள்களை வாங்குவதற்குரிய வாய்ப்பு பொது மக்களுக்குக் கிட்டும் என்று
விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம்
ஹஷிம் கூறினார்.

ஹஜி பெருநாளுக்கு இரு தினங்கள் முன்னதாக இந்த மலிவு
விற்பனையை நடத்தவுள்ளோம். ஒவ்வொரு நாளும் 18 இடங்களில் இந்த
மலிவு விற்பனையை நடத்தவிருக்கிறோம். எனினும், இதற்கான இடம்
இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றார் அவர்.

இந்த மலிவு விற்பனைத் திட்டம் சட்டமன்ற உறுப்பினர்களின்
கோரிக்கையின் பேரில் மேற்கொள்ளப்படாது. மாறாக, பெருநாளை
கொண்டாடவிருக்கும் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்
வகையில் இது நடத்தப்படும் என்றார் அவர்.

வழக்கமாக ஒன்பது இடங்களில் நடைபெற்று வரும் இந்த மலிவு
விற்பனை ஹஜி பெருநாளை முன்னிட்டு இரு மடங்கு கூடுதல்
இடங்களில் நடத்தப்படும் என்று இஷாம் நேற்று கூறியிருந்தார்.

சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தினால் நடத்தப்படும்
இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் பி கிரேட்
முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட்
6.00 வெள்ளிக்கும் மாட்டிறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் 5 கிலோ
சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00
வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.


Pengarang :