SELANGOR

இடிந்து விழுந்த நீர் தடுப்பைச் சரிசெய்ய RM500,000 வழங்கப்பட்டுள்ளது –  உலு லங்காட்

ஷா ஆலம், ஜூன் 16: பண்டார் பாரு பாங்கியில் உள்ள  சுங்கை அயர் ஹிதம் நீர் தடுப்பு இடிந்து விழுந்ததை சரி செய்ய  உலு லங்காட்டின் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை (ஜேபிஎஸ்) RM500,000 வழங்கியுள்ளது.

இந்த திட்டத்தின் முதல் கட்ட பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுங்கை ரமால் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் (ADN) கூறினார். மேலும், இத்திட்டம் ஒரு மாதத்திற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட உயர் அழுத்த நீரோட்டத்தால்  ஆற்று கரைகள் நில அரிப்பு உள்ளானதால் இச்சம்பவம் நிகழ்ந்ததாக மஸ்வான் ஜோஹர் தெரிவித்தார்.

“அதுமட்டுமில்லாமல் ஜோகிங் டிராக்கும் சரிசெய்யப் படும். இதன் மூலம் ஓய்வு நேர நடவடிக்கைகள் மற்றும் நடைப்பயணங்களுக்கு அதை மீண்டும் பயன்படுத்தலாம்,” என்று அவர் நேற்று முகநூலில் நேரடி ஒளிபரப்பு மூலம் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில வளர்ச்சிக் கழகத்திடம் (பிகேஎன்எஸ்) அனுமதி பெற்று பிறகு இந்த ஆண்டு இறுதிக்குள் அப்பணிகள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த சரிசெய்யும் பணி இரண்டாம் கட்டத்தையும் உள்ளடக்கியதாக என்று அவர் கூறினார்.

“ஏற்கனவே பழுது பார்க்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் கனரக இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை தளத்திற்குள் கொண்டு வருவதற்கு சிலாங்கூர் மாநில வளர்ச்சிக் கழகத்திடமிருந்து அனுமதி பெற்றுள்ளோம்,” என்று அவர் கூறினார்.


Pengarang :