SELANGOR

வேலைவாய்ப்பு சந்தை 2023, முதல் நாளே 6,000  வருகையாளர்களை ஈர்த்தது

ஷா ஆலம், 19 ஜூன்: சிலாங்கூர் மெகா கேரியர் கார்னிவல் எனப்படும்  வேலை வாய்ப்பு சந்தை 2023  பிற மாநிலங்களில் இருந்து வருகை புரிந்தோரின் வரவேற்பு அசாதாரணமான ஒன்றாக இருந்தது.

மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலானைச் சேர்ந்தவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்று உள்ளதாகப் பதிவுகள் காட்டுகின்றன என மனித மூலதனத் துறை பொறுப்பு மாநில ஆட்சிக்குழு  உறுப்பினர் கூறினார்.

சனிக்கிழமையன்று கிட்டத்தட்ட 6,000  வருகையாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டது பதிவு செய்யப்பட்டுள்ளது என முகமட் கைருடின் ஓத்மான் கூறினார். மேலும், பதிவு செய்யாத பங்கேற்பாளர்களும் உண்டு.

“இந்நிகழ்வில் மாநில அரசின் துணை நிறுவனங்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட முதலாளிகளுக்கான விண்ணப்ப செயல்முறையை நாங்கள் எளிதாக்கி உள்ளோம்.

நேற்று ஷா ஆலம் சிட்டி கவுன்சில் கன்வென்ஷன் சென்டரில் (எம்பிஎஸ்ஏ) நடந்த நிகழ்வின் நிறைவு விழாவில் அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த ஆண்டு 2.9 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 2.6 சதவீதமாக குறைந்திருப்பது டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் நிர்வாகத்தின் கொள்கைகளின் பலனாகும் என்று முகமட் கைருடின் மேலும் கூறினார்.

“மாநில அரசின் நோக்கம் மக்களுக்கு ஒரு வேலை தேடும் தளத்தை வழங்குவதாகும். சிலாங்கூரில் வேலை இல்லாமல் பலர் இருப்பதாக கூறினால், அது உண்மையல்ல என மேலும் தெரிவித்தார்.

சிலாங்கூர் மெகா கேரியர் கார்னிவல் 2023 இம்முறை F&B (உணவு மற்றும் குளிர்பானம்), சேவைகள், வாகனம், கல்வி, விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத் துறைகள் உட்பட 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களை உள்ளடக்கியது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதன் முதலில் நடைபெற்ற இந்த நிகழ்வு மொத்தம் 1,996 நபர்களுக்கு வேலை கிடைக்க உதவியது குறிப்பிடத்தக்கது.


Pengarang :