SELANGOR

சிலாங்கூர் குழந்தைகள் புத்தகக் கண்காட்சியில் 100 கண்காட்சியாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பு

ஷா ஆலம், ஜூன் 22: அடுத்த மாத இறுதியில் சிலாங்கூர் பொது நூலகக் கழகம் (பிபிஏஎஸ்) நடத்தும் சிலாங்கூர் குழந்தைகள் புத்தகக் கண்காட்சியில் மொத்தம் 100 கண்காட்சியாளர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

கண்காட்சியாளர்கள் 18 வயதுக்குட்பட்டோருக்கான படைப்புகளைத் தயாரிக்கும் குழந்தைகளின் புத்தகங்கள் வெளியீட்டாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் ஆவர் என்று பிபிஏ எஸ் நிறுவனப் பிரிவுத் தலைவர் ஜஃப்ருல்லா அரிஸ் கூறினார்.

 

“அவர்களில் பெரும்பாலோர் சிலாங்கூர் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி (SIBF) மற்றும் கோலாலம்பூர் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி போன்ற புத்தகக் கண்காட்சிகளில் செயலில் உள்ளனர்.

 

“அப்புத்தகக் கண்காட்சிகளுக்கு வந்தவர்களில் பலர் குழந்தைகளாக இருப்பதைக் கண்டோம். அதனால்தான் குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்ய முடிவு எடுத்தோம்,” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

 

இங்குள்ள பிகேஎன்எஸ் காம்ப்ளக்ஸ் ஷா ஆலமில் ஜூலை 27 முதல் 31 வரை இந்தக் கண்காட்சி நடைபெறும் என்றும், நல்ல வரவேற்பை பெற்றால் ஆண்டு நிகழ்வாக மாறும் என்றும் ஜஃப்ருல்லா நம்பிக்கை தெரிவித்தார்.


Pengarang :