SELANGOR

தாமான் சீ இடைநிலைப்பள்ளியில் மோசமான உட்கட்டமைப்புகளை மேம்படுத்த RM62,300 செலவிடப்பட்டது- கம்போங் துங்கு தொகுதி

ஷா ஆலம், ஜூன் 22: தாமான் சீ இடைநிலைப்பள்ளியில் சில மோசமான உள்கட்டமைப்புகளை மேம்படுத்த கம்போங் துங்கு தொகுதி சேவை மையம் RM62,300 செலவிட்டது.

இந்த நிதியானது இந்த ஆண்டு சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் (PSP) ஒரு பகுதியாகும். இதில் குழாய்கள் கூரைகள், வடிகால்கள் போன்றவை சரிசெய்யப்பட்டன என அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்  லிம் யீ வெய் கூறினார்.

“மேலும், கழிப்பறை, மற்றும் அறிவியல் ஆய்வகத்திற்குத் தண்ணீர் வழங்குவதற்கு நீர் பம்ப் மற்றும் தொட்டியும் நிறுவப்பட்டது,” என்று அவர் கூறினார்.

இந்த மேம்பாட்டு பணிகளுக்குப் பிறகு பள்ளிக்குத் புதிய புத்துணர்ச்சி கிடைத்துள்ளது. மாணவர்களும் ஆசிரியர்களும் கற்பித்தல் மற்றும் கற்றல் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஒத்துழைப்பையும் ஆர்வத்தையும் காட்ட முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“பள்ளி உறுப்பினர்கள் மேம்படுத்தப்பட்ட உபகரணங்களை முடிந்தவரை சிறப்பாகப் பயன்படுத்துவதோடு அவைகளைச் சேதப்படுத்துவதைத் தவிர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக,” அவர் கூறினார்.


Pengarang :