SELANGOR

இணையம் வழி குப்பை அகற்றும்  புகார் பயன்பாட்டில் சுமார் 100,000 பயனர்கள் பதிவு – கேடிஇபி கழிவு தகவல்

ஷா ஆலம், ஜூன் 22: கேடிஇபி கழிவு மேலாண்மை (கேடிஇபிடபிள்யூஎம்) உருவாக்கிய இணையம் வழி  குப்பை அகற்றும் சேவை  மீதான புகார் செயல்பாட்டில் இப்போது சுமார் 100,000 பயனர்களைப் பதிவு செய்துள்ளது.

2022 இல் 36,800க்கும் அதிகமான புகார்களை ஐ-க்ளீன் சிலாங்கூர் வெற்றிகரமாகத் தீர்த்து வைத்தது என கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் உதவி பொது மேலாளர் கூறினார். 2021 இல் 30,949 புகார்கள் ஐ-க்ளீன் சிலாங்கூரால் தீர்த்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு மே 30 ஆம் தேதி வரை, சமீபத்திய புள்ளிவிவரங்கள் படி திடக்கழிவு சேகரிப்பு தொடர்பான 14,718 புகார்களை கேடிஇபி கழிவு மேலாண்மை தீர்த்துள்ளது என்பதைக் காட்டுகிறது.

“புகார்களின் தீர்வு சிலாங்கூரில் உள்ள 12 நிர்வாக பகுதிகளில் குப்பை சேகரிப்பு சேவைகள் மற்றும் பொது சுத்தம் ஆகியவற்றை உள்ளடக்கியது,” என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

பெறப்படும் ஒவ்வொரு புகாரும் உள்ளூர் புகார் மைய அதிகாரிக்கு அனுப்பப்பட்டு, நடவடிக்கை எடுப்பதற்கான கிளை நடவடிக்கைகளின் தலைவர் மற்றும் தள மேற்பார்வையாளருக்கு அனுப்பப்படும் என்றும் அவர் கூறினார்.

நவம்பர் 18, 2021 அன்று, இந்த சேவை மொத்தக் கழிவுகளை அகற்ற விண்ணப்பிக்கும், குடியிருப்பாளர்கள் தங்கள் பகுதிகளில் கழிவு மீதான புகார்களை சமர்ப்பிப்பதை எளிதாஇக்கியுள்ளது என டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பொதுமக்கள் குறிப்பிட்ட செயலியைக் கூகுள் பிளே மற்றும் ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யலாம். மேலும் வாடிக்கையாளர் சேவையை 1-800-88-2824/019-375 9592 அல்லது புலனம் (019-2742824) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதனால் புகார்கள் விரைவாகவும் துல்லியமாகவும் கையாளப்படும்.


Pengarang :