SELANGOR

பொது ஏலத்தில்  RM18,400க்கு மேல் வசூல் – கிள்ளான் நகராண்மை கழகம்

கிள்ளான், ஜூன் 23: நேற்று, இங்குள்ள கிள்ளான் நகராண்மை கழக அமலாக்க அலுவலக மைதானத்தில்  பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பொது ஏல விற்பனை மூலம் RM18,400க்கு மேல் வசூலிக்கப்பட்டது.

இந்த ஏலத்தில் விசிறி மற்றும் உலோக வெட்டும் இயந்திரம் அதிக விலையில் விற்கப்பட்டன அதாவது RM2,360 ஆகும் அவற்றின் ஏல மதிப்பு என கிள்ளான் நகராண்மை கழக அமலாக்கத்தின் துணை இயக்குனர் ஷாருல் ஹஸ்ரி அப்த் மஜித் கூறினார்.

“பொதுமக்களுக்காக, 20 யூனிட் மின்விசிறிகள், மற்றும் ஐந்து யூனிட் உலோகம் வெட்டும் இயந்திரம் விற்பனை செய்யப்பட்டன. மேலும், ஏலத்தில் நாற்காலிகள் அதிகமாக வாங்கப்பட்டன அதாவது 787 யூனிட்களில் 462 யூனிட்கள் விற்கப்பட்டன.

“நாங்கள் ஏலத்தின் மூலம் சேகரிக்கப் பட்ட பணத்தை எம்பிகே நிதியில் வைப்போம்,” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

இந்த பொது ஏல விற்பனையில் மொத்தம் 78 பேர் கலந்து கொண்டனர் மற்றும் அனைத்து பொருட்களும் மூன்று மணி நேரத்திற்குள் விற்கப்பட்டன.

ஏலம் விடப்பட்ட பொருட்கள் செப்டம்பர் முதல் டிசம்பர் 2022 வரை கைப்பற்றப் பட்டதாகும் என்று ஷாருல் குறிப்பிட்டார்.

“இந்த ஆண்டு மார்ச், ஜூன், செப்டம்பர் மற்றும் டிசம்பர் 2023 என வருடத்திற்கு நான்கு முறை ஏல விற்பனை நடைபெறும். குறைந்த விலையில் தரமான பொருட்களைப் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப் படுவதால்  இந்த ஏல விற்பனைக்குப் பொதுமக்கள் வர விரும்புகிறார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.


Pengarang :