NATIONAL

ஜூன் 22 முதல் 28 வரை எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை

கோலாலம்பூர், ஜூன் 23: ஜூன் 22 முதல் ஜூன் 28 வரை பெட்ரோல் RON97, RON95
மற்றும் டீசலின் சில்லறை விலையில் எந்த மாற்றமும் இல்லை.

நிதி அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், RON97 லிட்டருக்கு (RM3.37)
ஆகவும், RON95 (RM2.05) மற்றும் டீசல் (RM2.15) ஆகவும் உள்ளது.

உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து
மக்களைப் பாதுகாக்கும் வகையில், RON95 பெட்ரோல் லிட்டருக்கு 2.05 ஆகவும் மற்றும்
டீசல் லிட்டருக்கு RM2.15 என்ற உச்சவரம்பு விலையை அரசு பராமரித்து வருவதாக நிதி
அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உலகக் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கத்தை அரசாங்கம்
தொடர்ந்து கண்காணித்து, மக்களின் நலன் பராமரிக்கப்படுவதை உறுதிசெய்யத் தகுந்த
நடவடிக்கைகளை எடுக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

– பெர்னாமா


Pengarang :