MEDIA STATEMENTNATIONAL

தமிழ்ப் பள்ளி நூலகங்களுக்கு அமைச்சர் சிவக்குமார் வெ.20,000 மதிப்புள்ள புத்தகங்கள் அன்பளிப்பு

கோலாலம்பூர் ஜூலை 2-  நாட்டில் உள்ள தமிழ் பள்ளிகளின் நூல் நிலையங்களுக்கு 20,000 வெள்ளி மதிப்புள்ள புத்தகங்களை மனிதவள அமைச்சர் வ சிவகுமார் அன்பளிப்பு செய்தார்.

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை மேலோங்க செய்யும் வகையில் இந்த புத்தகங்களை அன்பளிப்பு செய்வதாக பலத்த கரவொலிக்கிடையே அவர் இதனை தெரிவித்தார்.

நாடறிந்த குயில் ஜெய பக்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் 20 ஆம் ஆண்டு ஜெயபக்தி புத்தக   கண்காட்சி விழாவுக்கு மனிதவள அமைச்சர் சிவகுமார் நேற்று சிறப்பு வருகை புரிந்தார்.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தக கண்காட்சி விழாவை சிறப்பாக நடத்தி வரும் குயில் ஜெய பக்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் டத்தோ டாக்டர் கு. செல்வராஜ் அளப்பரிய தமிழ் சேவையை பெரிதும் பாராட்டுவதாக அவர் சொன்னார் .

குயில் ஜெய பக்தி நிறுவனத்தின் மூலம் தமிழ் பள்ளிகளில் உள்ள நூல் நிலையங்களுக்கு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும்

இந்த புத்தகங்களை வாங்குவதற்கு தனது சார்பில் 20,000 வெள்ளியை வழங்குவதாக அவர் சொன்னார்.


Pengarang :