SELANGOR

மாநிலத் தேர்தல்- இவ்வாண்டு தொடக்கம் முதல் தயார் நிலையில் மோரிப் தொகுதி

கோல் லங்காட், ஜூலை 3- மாநிலத் தேர்தலை எதிர் கொள்ள மோரிப்
சட்டமன்றத் தொகுதி இவ்வாண்டு தொடக்கம் முதல் தயார் நிலையில்
இருந்து வருகிறது.

இதன் தொடர்பில் கோல லங்காட் அம்னோ தொகுதி மற்றும்
கிளைகளுடன் அணுக்கமான ஒத்துழைப்பு நல்கப்பட்டு வருவதாக
அத்தொகுதிக்கான நடப்பு சட்டமன்ற உறுப்பினர் ஹஸ்னோல் பஹாருடின்
கூறினார்.

நமது ஏற்பாடுகள் சிறப்பான முறையில் உள்ளன. இவ்வாண்டு தொடக்கம்
முதல் அதாவது சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கு ஐந்து மாதங்களுக்கு
முன்னதாகவே நாங்கள் தயாராகி விட்டோம். அனைத்து மாவட்ட
வாக்களிப்பு மையங்களிலும் தேர்தல் இயந்திரம் தயாராக உள்ளன.

இந்த தேர்தல் ஒற்றுமை அரசாங்கத்திற்கு மிகவும் முக்கியமானது
என்பதால் மோரிப் தொகுதி தேசிய முன்னணி ஒருங்கிணைப்பாளராக
இருக்கும் கோல லங்காட் தொகுதி அம்னோ தலைவருடன் நான்
பேச்சுவார்த்தை நடத்தியுளேன். என்று அவர் சொன்னார்.

மோரிப் தொகுதி ஏற்பாட்டில் நேற்று நடைபெற்ற ஒற்றுமை விருந்து
நிகழ்வின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

மோரிப் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்கான வாய்ப்பு உள்ளதா
என வினவப்பட்ட போது, இதன் தொடர்பில் அமானா கட்சியின்
தலைமைத்துவம் முடிவினை எடுக்கும் என்று அவர் பதிலளித்தார்.

இதனிடையே, இத்தேர்தல் குறித்து கருத்துரைத்த கோல லங்காட் அம்னோ
தலைவர் டத்தோ ஜூரிஹான் யூசுப், எதிர்வரும் மாநிலத் தேர்தலில்
ஹராப்பான் வெற்றியை உறுதி செய்வதில் தங்களின் அனுபவத்தை
அம்னோ பயன்படுத்தும் எனக் கூறினார்.

ஒத்துழைப்பைப் பொறுத்தவரை எந்த பிரச்சனையும் இல்லை. தேர்தல்
இயந்திரத்தை உருவாக்குவதில் இணக்கம் காண்பதற்காக இரு தரப்புக்கும்
இடையே அடிக்கடி சந்திப்பு நடத்தப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :