SELANGOR

சுயச் சேவை இயந்திரங்கள் மூலம் இலவசச் சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டம்

ஷா ஆலம், ஜூலை 3: சுயச் சேவை இயந்திரங்கள் மூலம் இலவசச் சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டத்தின் முதல் கட்டத்தை சிலாங்கூர் அரசாங்கம் தொடங்கியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் முதல் 100,000 ரிங்கிட் ஒதுக்கீட்டில் மாதவிடாய் பிரச்சனையை நிவர்த்தி செய்யும் இத்திட்டத்தில் ஐந்து பள்ளிகள் முன்னோடிகளாக மாறியதாக டத்தோ மந்திரி புசார் கூறினார்.

“இந்தத் திட்டமானது 100 முதல் 200 ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்குச் சானிட்டரி நாப்கின்களை இலவசமாகப் பெறுவதற்குப் பயனளிக்கிறது” என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முகநூல் மூலம் தெரிவித்தார்.

ஜூன் 18 அன்று, இந்த முன்னோடித் திட்டத்தில் சுங்கை துவா இடைநிலைப்பள்ளி, கோம்பாக்; புக்கிட்கூடா, கிள்ளான் இடைநிலைப்பள்ளி (பெண்கள்); காப்பார் இடைநிலைப் பள்ளி, கிள்ளான்; புத்ரா பெர்டானா இடைநிலைப்பள்ளி, சிப்பாங் மற்றும் கோலா சிலாங்கூர் இடைநிலைப்பள்ளி ஆகியவை இடம்பெற்றுள்ளன என தெரிவித்தார்.

சிலாங்கூர் பட்ஜெட் 2023 யில் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் இலவசச் சானிட்டரி நாப்கின்களை வழங்குதல் உட்பட பெண்களுக்கு அதிகாரம் அளிக்க RM200,000 ஒதுக்கப்பட்டுள்ளது.

இலவசச் சானிட்டரி நாப்கின் திட்டத்தை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாகச் சிலாங்கூர் திகழ்கிறது.


Pengarang :