SELANGOR

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அபரிமித பங்களிப்பு சிலாங்கூரின் வெற்றிக்குச் சான்று- டத்தோ தெங்

ஷா ஆலம், ஜூலை 4- நாட்டின் மொத்த
உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.)
சிலாங்கூரின் பங்களிப்பு 25.5
விழுக்காடாகப் பதிவாகியுள்ளது
மாநிலத்தின் திட்டங்களும் வியூகங்களும்
விரும்பிய முடிவுகளைத் தந்துள்ளதைக்
காட்டுகிறது என்று டத்தோ தெங் சாங்
கிம் கூறினார்.

இந்த அடைவு நிலையின் விளைவாக சிலாங்கூர் ஒரு முக்கியமான
மாநிலமாக கருதப்படும் நிலை உருவாகியுள்ளது என்று முதலீட்டுத்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் சொன்னார்.

கடந்த 10 ஆண்டுகளில் மாநிலத்தின்
மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்ந்து
அதிகரித்து, இப்போது நாட்டின்
பொருளாதாரத்தில் கால் பகுதிக்கு மேல்
நாம் பங்களிக்கக்கூடிய அளவை
எட்டியுள்ளது. மற்ற மாநிலங்களை விட
இது மிக அதிகமாகும் என அவர்
குறிப்பிட்டார்.

இந்த வெற்றிக்கு எங்கள் முயற்சிகள் மற்றும் வியூகத் திட்டமிடல்
முக்கிய காரணமாகும். இதன் வழி நேர்மறையான முடிவுகளைப் பெற
முடிந்தது என்று அவர் கூறினார்.

சிலாங்கூர் இப்போது தனது மொத்த
உள்நாட்டு உற்பத்தி தொடர்ந்து
வளர்ச்சியடைவதை உறுதிசெய்ய
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையை
மேம்படுத்துவது உள்ளிட்ட முயற்சிகளை
மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று
தெங் தெரிவித்தார்.

இங்கு முதலீடு செய்வதற்கு
வெளிநாட்டுத் தரப்பினரை மட்டும் இனி
நாம் சார்ந்திருக்க முடியாது. மாறாக,
குறிப்பாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் நாம்
திட்டமிட்டு முதலீடு செய்ய
வேண்டும். சிலாங்கூரில் முதலீடு
செய்வதும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதும்
எங்களின் பிரதான நோக்கமாகும் என
அவர் மேலும் சொன்னார்.

என்னைப் பொறுத்தவரை நமது மதிப்புச்
சங்கிலியை உருவாக்க நாம் எதிர்கொள்ள
வேண்டிய சவாலாகும். நாம் உற்பத்தி
துறையில் மட்டும் கவனம் செலுத்த
முடியாது. மாறாக, மற்ற
வாய்ப்புகளையும் ஆராய வேண்டும்
என்றார் அவர்.

சிலாங்கூரின் மொத்த உள்நாட்டு
உற்பத்தியின் பங்களிப்பு 2022 இல் 25.5
சதவீதமாக அதிகரித்துள்ளதை மலேசிய புள்ளிவிபரத்
துறை கடந்த வாரம் வெளியிட்ட
அறிக்கை காட்டுகிறது.


Pengarang :