SELANGOR

ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் வருமானம் கடந்தாண்டு 245 கோடி வெள்ளியாக அதிகரிப்பு

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 5- ஆயர் சிலாங்கூர் சென். பெர்ஹாட்
நிறுவனத்தின் வருமானம் கடந்தாண்டு 245 கோடி வெள்ளியாக உயர்வு
கண்டது. கடந்த 2021ஆம் ஆண்டில் இந்த வருமானம் 218 கோடி
வெள்ளியாக மட்டுமே இருந்தது.

கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது
மற்றும் நீக்கப்பட்டது, கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் அமல்படுத்தப்பட்ட
குடிநீர்க் கட்டண மறுசீரமைப்பு ஆகியவை இந்த வருமான உயர்வுக்கு
காரணமாக இருந்ததாக ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் இடைக்காலத்
தலைமைச் செயல்முறை அதிகாரி இஞ்சினியர் அபாஸ் அப்துல்லா
கூறினார்.

இது தவிர, ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் நடவடிக்கைச் செலவினமும்
கடந்தாண்டு 5.26 விழுக்காடு அதிகரித்து 2.56 கோடி வெள்ளியாக
பதிவானது. கடந்த 2021இல் இச்செலவினம் 243 கோடி வெள்ளியாக மட்டும்
இருந்தது என்று அவர் தெரிவித்தார்.

அதே சமயம் கடந்த 2021ஆம் ஆண்டு 137 கோடி வெள்ளியாக இருந்த
மூலதனச் செலவினம் கடந்தாண்டு 88.21 விழுக்காடு அதிகரித்து 258 கோடி
வெள்ளியாக பதிவானது என்றார் அவர்.

முறையான திட்டமிடல் மற்றும் ஆக்ககரமான அமலாக்கம் காரணமாகக்
கடந்தாண்டு கடன் மற்றும் நிர்வாகத்தை சிறப்பாக நிர்வகிப்பதில்
நிலையான முன்னெடுப்புகளை ஒருமுகப்படுத்துவதற்குரிய வாய்ப்பு
கிட்டியது என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :