SELANGOR

பயன்படுத்திய சமையல் எண்ணெயை விற்கும் திட்டம் – சபாக் பெர்ணம் மாவட்ட மன்றம் 

ஷா ஆலம், ஜூலை 5: ஜூலை 8 முதல் நவம்பர் 25 வரை தேர்ந்தெடுக்கப்பட்ட 10 இடங்களில் பயன்படுத்திய சமையல் எண்ணெயை வாங்கும் திட்டத்தை சபாக் பெர்ணம் மாவட்ட மன்றம் (எம்.டி.எஸ்.பி) ஏற்பாடு செய்துள்ளது.

பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் ஒரு கிலோகிராம் ரிங்கிட் 2.20 என்ற விலையில் வாங்கப்படும் என்று உள்ளூர் அதிகாரசபை (PBT) தெரிவித்துள்ளது.

“உங்கள் வீட்டில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு கிலோ கிராம் சமையல் எண்ணெயும் ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு வருமான ஆதாரமாக இருக்கும்.

“பயன் படுத்தப்பட்ட சமையல் எண்ணெயைப் பணமாக மாற்றுவோம். நிர்ணயிக்கப்பட்ட நேரம், தேதி மற்றும் இருப்பிடத்தில் சந்திப்போம்” என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

காலை சந்தை உரிமம் வழங்கும் மையம் (ஜூலை 8), சபாக் பெர்ணம் காலை சந்தை (ஜூலை 22), செகிஞ்சன் பொதுச் சந்தை (ஆகஸ்ட் 12), சுங்கை பெசார் பொதுச் சந்தை (ஆகஸ்ட் 26) மற்றும் பிஎன்ஓ பெக்கான் பொதுச் சந்தை (செப்டம்பர் 2) ஆகிய இடங்களில் இந்நிகழ்ச்சி நடைபெறும்.

மேலும், பாகன் தெராப் காலை சந்தை மையம் (செப்டம்பர் 17), மெர்பாவ் பெர்டாரா பேருந்து நிலையம் (அக்டோபர் 7), சபாக் பெர்ணம் காலை சந்தை (அக்டோபர் 22), சுங்கை தாவார் பொதுச் சந்தை (நவம்பர் 18) மற்றும் செகிஞ்சன் பொதுச் சந்தை (நவம்பர் 25) ஆகிய இடங்களிலும் இந்நிகழ்ச்சி தொடரும்.


Pengarang :