SELANGOR

சாலை விரிவாக்கத் திட்டத்தின் மூலம் போக்குவரத்து நெரிசல் சமாளிக்கப்படும்

ஷா ஆலம், ஜூலை 5: மாநில அரசின் 3 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில் சாலை விரிவாக்கத் திட்டத்தின் மூலம் பெர்சியாரான் மொக்தார் டஹாரியில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசல் சமாளிக்கப்படும்.

ஒரு கிலோமீட்டர் இருவழிச் சாலையை உள்ளடக்கிய இத்திட்டம் குறுகிய கால நடவடிக்கையாகும். மேலும், இத்திட்டம் இவ்வாண்டு இறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது என உள்கட்டமைப்பு துறை பொறுப்பு உறுப்பினர் இஷாம் அசிம் கூறினார்.

“இந்த திட்டம் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு RM20 மில்லியன் மதிப்பீட்டில் இயங்கத் தொடங்கும். இந்தத் திட்டம் சிலாங்கூர் மாநில வளர்ச்சிக் கழகம் மற்றும் அந்தப் பகுதியை மேம்படுத்தும் தேகோ மாந்தாப் நிறுவனத்தால் ஏற்கப்படுகிறது” என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கி, இப்பகுதியில் ஏற்படும் கடுமையான நெரிசலைச் சமாளிக்கும் வகையில் குறிப்பிட்ட சாலைக்கு எதிர் பாதையைத் திறக்க மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது.


மேலும், இப்பிரச்சனை தொடர்பாக 100,000க்கும் மேற்பட்ட பயனர்களிடமிருந்து புகார்கள் பெறப்பட்டுள்ளது.


Pengarang :