SELANGOR

`திக் தோக் உள்ளடக்க படைப்பாளர்’ கருத்தரங்கில் பங்கேற்க அழைப்பு

ஷா ஆலம், ஜூலை 6: கிள்ளான் மாநகராட்சி (MPK) எதிர்வரும் சனிக்கிழமை ராஜா இஸ்மாயில் ஆடிட்டோரியத்தில் நடைபெறும் `திக் தோக் உள்ளடக்க படைப்பாளர்’ கருத்தரங்கில் பங்கேற்க 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களை அழைக்கிறது.

காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இந்த கருத்தரங்கில் முதல் 50 பங்கேற்பாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்படும் மற்றும் RM10 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அதன் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் துறை தெரிவித்துள்ளது.

“பங்கேற்பாளர்கள் திக் தோக் உள்ளடக்கம், உத்திகள் மற்றும் கோட்பாடுகளை உருவாக்க கற்றுக் கொள்வதுடன், வருமானம் ஈட்டும் தளமாகவும் அதனைப் பயன்படுத்துவார்கள்.

“பங்கேற்பாளர்கள் கருத்தரங்கிற்குப் பிறகு சான்றிதழ் மற்றும் பணி புத்தகத்தையும் பெறுவார்கள்,” என்று சிலாங்கூர்கினியிடம் தெரிவிக்கப்பட்டது.

ஆர்வமுள்ள பொதுமக்கள் சுவரொட்டியில் உள்ள QR குறியீட்டின் மூலம் விண்ணப் படிவத்தை ஸ்கேன் செய்யலாம் அல்லது அதிகாரிகளான திரு. ஹெல்மி (017-3617275) மற்றும் திரு. லுக்மான் (012-2595851) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :