SELANGOR

கிட்டத்தட்ட 15,000 புகார்களுக்கு, 24 மணி நேரத்திற்குள் தீர்வு- ஐ-க்ளீன் சிலாங்கூர்

ஷா ஆலம், ஜூலை 7: ஐ-க்ளீன் சிலாங்கூர் பயன்பாட்டின் மூலம் திடக்கழிவு சேகரிப்பு தொடர்பான கிட்டத்தட்ட 15,000 புகார்கள் இந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரை புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் தீர்க்கப்பட்டன.

சிலாங்கூரில் திடக்கழிவு மற்றும் குப்பை மேலாண்மையின் திறனை இந்த வளர்ச்சி நிரூபித்துள்ளது என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“2021 இல் 30,949 புகார்கள் தீர்க்கப் பட்டுள்ள நிலையில் கடந்த ஆண்டு அவை 36,800ஆக அதிகரித்துள்ளது. இப்புகார்கள் மொத்த குப்பை சேகரிப்பு மற்றும் பொது சுத்தம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

“KDEB கழிவு மேலாண்மை (KDEBWM) செய்த பணி பாராட்டப்பட வேண்டும்,” என்று மந்திரி புசார் நேற்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

குப்பை அகற்றும் புகார் செயலி மூலம் மாநில அரசு வழங்கும் சிறந்த சேவையை அனுபவிக்கும் வகையில், சிலாங்கூர் மக்கள் அதைப் பயன் படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அமிருடின் கூறினார்.

“சிலாங்கூர் மக்கள் இந்தப் பயன் பாட்டைப் பயன்படுத்தலாம். தற்போது 100,000க்கும் மேற்பட்டோர் இச்செயலில் பதிவு செய்யப்பட்ட அதனைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்,” என்று அவர் குறிப்பிட்டார்.

ஐ-க்ளீன் சிலாங்கூர் என்பது பக்காத்தான் ஹராப்பான் (ஹரப்பான்) தலைமையிலான மாநில அரசின் முன்முயற்சியில் ஒன்றாகும். இத்திட்டம் குப்பைகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தீர்க்கிறது என்றார்.

மேலும், இந்த திட்டமானது மொத்த குப்பைகளை அகற்றும் சேவைகளுக்கு விண்ணப்பிப்பதுடன், குடியிருப்பாளர்கள் தங்கள் பகுதிகளில் தூய்மை சம்பந்தப்பட்ட புகார்களை சமர்பிப்பதை எளிதாக்கியது என்று அவர் தெரிவித்தார்.


பொதுமக்கள் இச்செயலியைக் கூகுள் பிளே மற்றும் ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யலாம். வாடிக்கையாளர் சேவைக்கு 1-800-88-2824/019-375 9592 அல்லது புலனம் (019-2742824) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதனால் புகார்கள் விரைவாகவும் துல்லியமாகவும் கையாளப்படும்.


Pengarang :