ADN Sungai Ramal Mazwan Johar (kanani) membantu orang ramai mendapatkan keperluan asas menerusi program Jelajah Ehsan Rakyat yang menawarkan barangan asas segar dengan harga murah berbanding pasaran di perkarangan Kompleks PKNS, Bandar Baru Bangi, Kajang pada 16 September 2022. Foto AHMAD ZAKKI JILAN/SELANGORKINI
SELANGOR

சுங்கை ரமால் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் மாநிலத் தேர்தலை (பிஆர்என்) எதிர்கொள்ள தயாராகிறது.

ஷா ஆலம், ஜூலை 7: சுங்கை ரமால் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் மாநிலத் தேர்தலை (பிஆர்என்) எதிர்கொள்ள தயாராகிறது.

ஒற்றுமை என்ற கருத்துக்கு ஏற்ப, பாங்கியில் பாரிசான் நேஷனல் (பிஎன்) உடன் தனது தரப்பு உறவை ஏற்படுத்தியது என்று சுங்கை ரமால் தொகுதி உறுப்பினர் மஸ்வான் ஜோஹர் கூறினார்.   .

” எனவே நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே பிஎன் உடன் ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். மேலும் இந்த பகுதியைப் பாதுகாக்கும் பணியின் முன்னேற்றம் மிகவும் சிறப்பாக உள்ளது.

“நாளை நடைபெறும் மடாணி ஒற்றுமை நிகழ்வு மற்றும் மடாணி ஒற்றுமை கண்காட்சி ஆகிய முக்கிய நிகழ்ச்சிகளுக்குச் சுங்கை ரமால் தொகுதி தேர்ந்தெடுக்கப்பட்டது,” என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

14வது பொதுத் தேர்தலில் மஸ்வான், சுங்கை ரமால் மாநிலத் தொகுதியில் 24,591 வாக்குகள் பெற்று 10,630 வாக்குகள் பெரும்பான்மையுடன் பாஸ் வேட்பாளர் நுஷி மஹ்ஃபோட்ஸ் மற்றும் பிஎன் வேட்பாளர் அப்துல் ரஹீம் முகமது அமீன் ஆகியோரை தோற்கடித்தார்.

தேர்தல் ஆணையம் (SPR) கெடா, கிளந்தான், திரங்கானு, பினாங்கு, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் ஆகஸ்ட் 12-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவித்தது.

சம்பந்தப்பட்ட ஆறு மாநிலங்களில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நாள் ஜூலை 29 ஆகும், முன்கூட்டியே வாக்குப்பதிவு ஆகஸ்ட் 8 அன்று நடைபெறும்.


Pengarang :