SELANGOR

கோம்பாக் நாடாளுமன்ற தொகுதி மலிவு விற்பனையில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

கோம்பாக், ஜூலை 10: இங்குள்ள பத்து கேவ்ஸ் பொது மைதானத்தில் நடைபெற்ற கோம்பாக் நாடளுமன்ற தொகுதி மலிவு விற்பனையில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் கலந்து கொண்டு நல்ல வரவேற்பை வழங்கினர்.

நிகழ்ச்சி காலை 10 மணிக்குத் தொடங்கிய இரண்டு மணி நேரத்திற்குள் அனைத்து பொருட்களும் விற்று தீர்ந்து விட்டன என சுங்கை துவா தொகுதியின் மக்கள் சேவை மைய அதிகாரி சண்முகம் பத்துமலை கூறினார்.

ஜனவரி 2023 முதல் நேற்று வரை சுங்கை துவா தொகுதியில் 50 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட இத்திட்டம் 20,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களுக்கு பயன் அளித்தது.

“நேற்றைய நிகழ்வில், 500 கோழிகள், 300 மீன் பாக்கெட்டுகள், 300 பலகைகள் முட்டை , 300 இறைச்சி பாக்கெட்டுகள், 300 அரிசி பாக்கெட்டுகள் மற்றும் 150 எண்ணெய் பாக்கெட்டுகள் ஆகியவை இரண்டு மணி நேரத்திற்குள் விற்று தீர்ந்து விட்டன,” என்று அவரைச் சந்தித்தபோது கூறினார்.

பி.கே.பி.எஸ் எதிர்வரும் ஜூலை 15 முதல், பொது மக்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஒரு கிலோகிராம் எண்ணெய் பாக்கெட்டை RM2 என்ற விலையில் விற்பனை செய்கிறது.


பொதுமக்கள் பி.கே.பி.எஸ் முகநூல் அல்லது http://linktr.ee/myPKPS என்ற இணைப்பின் மூலம் மலிவு விற்பனை நடைபெறும் இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.


Pengarang :