EL

சுங்கை துவா தொகுதியில்  தேர்தல் இயந்திரம் வெள்ளோட்டம்

பத்து கேவ்ஸ். ஜூலை.9-சுங்கை துவா சட்ட மன்ற தொகுதியில்  ஒற்றுமை தேர்தல் இயந்திர வெள்ளோட்டம் சிறப்பாக நடந்தேறியது. தேசிய முன்னணியை சேர்ந்த அம்னோ, ம.சீ.ச, ம.இ.கா. பி.பி.பி ஆகிய கட்சிகளும் கலந்து கொண்டன. அனைவரையும் முறையாக வரவேற்று கௌரவித்தனர்.
அனைவரும் ஒற்றுமையாக நம்பிக்கை கூட்டணியோடு இணைந்து கோம்பாக் தொகுதியில் உள்ள சுங்கை துவா, உலு கிள்ளான்,  கோம்பாக் செத்தியா ஆகிய 3 தொகுதிகளையும் தொடர்ந்து ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் இருக்கும் என்று தேர்தல் இயந்திர தொடக்க நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்கள்  தெரிவித்தனர். தேர்தல் இயந்திரத்தை சிலாங்கூர் மாநில காபந்து அரசாங்கத்தின் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் சாரி தொடங்கி வைத்தார்.

அமானா, அம்னோ, பி.கே.ஆர் கட்சிகளின் கோம்பாக் தொகுதி முன்னணித் தலைவர்கள் பிரச்சார உரையாற்றினார்கள். கடந்த கால நிகழ்வுகளை மறந்து புதிய தெம்புடன் புதிய எழுச்சியுடன் நம்பிக்கை கூட்டணியும் தேசிய முன்னணியும் வெற்றிக்காக கடுமையாக பாடுபடுவோம் என்று கேட்டுக் கொண்டனர்.

தேர்தல் இயந்திர தொடக்கத்தின் அடையாளமாக தொப்பி, சீருடை, தேர்தல் அதிகாரியாக செயல்பட நியமனக் கடிதம் கொடுக்கப்பட்டது.

சுமார் ஆயிரம் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். தேசிய முன்னணி மற்றும் நம்பிக்கை கூட்டணியின் தொண்டர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். கோம்பாக் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 3 சட்ட மன்ற  தொகுகளையும் மீண்டும் கைப்பற்றி மாநில அரசை அமைவதற்கு தீவிரமாக பணியாற்றுவோம் என்று அனைவரும் உறுதி எடுத்துக் கொண்டனர்.

சிலாங்கூர் மாநிலம் முழுவதும் ஒற்றுமை தேர்தல் இயந்திரம் செயல் பட வேண்டும் என்று மந்திரி புசார் கேட்டுக் கொண்டார். தேசிய முன்னணி தொண்டர்களும் இணைந்து வெற்றிக்காக கடுமையாக பாடு பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோம்பாக் தொகுதியின் முக்கியத் தலைவர்களும் ஒற்றுமை குறித்து வலியுறுத்தினர். ஆக மொத்தத்தில் கோம்பாக் தொகுதியே வலுவாக செயல்பட தொடங்கி விட்டது என்றால் அது மிகையாகாது.

கோம்பாக் தொகுதியில் ம.இ.கா. தலைவர் கோபி ராஜ், டத்தோ எஸ்.எஸ்.ராஜகோபால் மற்றும் பல கிளை தலைவர்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.


Pengarang :