SELANGOR

பலாக்கோங் தொகுதியில் 10 அடிப்படை வசதி மேம்பாட்டுத் திட்டங்கள் அமல்

ஷா ஆலம், ஜூலை 11- சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் கீழ்
(பி.எஸ்.பி.) பலாக்கோங் தொகுதியில் பத்து அடிப்படை வசதித் திட்டங்கள்
அமல்படுத்தப்படுள்ளன.

சுமார் ஒரு லட்சம் வெள்ளி செலவிலான அந்த பராமரிப்பு மற்றும்
அடிப்படை வசதித் திட்டங்கள் காஜாங் நகராண்மைக் கழகம் மற்றும் உலு
லங்காட் மாவட்ட நில அலுவலகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டதாக
பலாக்கோங் தொகுதியின் நடப்பு உறுப்பினரான வோங் சியூ கீ கூறினார்.

கம்போங் பாரு பலாக்கோங், கம்போங் பாரு பத்து 11, கம்போங் சுங்கை
பாலாக்கில் அலங்கார வளைவு அமைப்பது, தாமான் சூரியா ஜெயா,
தாமான் புக்கிட் அங்சானா, தாமான் தாமிங் கிரி மற்றும் தாமான் ஸ்ரீ
செராசில் விளையாட்டு மைதானம் அமைப்பது ஆகியப் பணிகள்
மேற்கொள்ளப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.

இவை தவிர, தாமான் மேகா சந்தையின் கூரையை பழுதுபார்ப்பது,
கம்போங் பாரு சுங்கை சுவா வலைப்பந்து அரங்கம் மற்றும் கம்போங்
சுங்கை பாலாக் புட்சால் அரங்கம் ஆகியவற்றில் கூரை அமைப்பது ஆகிய
திட்டங்களும் இந்நிதியில் அமல்படுத்தப்பட்டன என்றார் அவர்.

சமூகப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற வசதிகள் செய்து தரப்பட
வேண்டும் என்ற வட்டார மக்களின் நீண்ட நாள் கோரிக்கை இத்திட்டத்தின்
மூலம் பூர்த்தியடைந்துள்ளது என்றும் அவர் சொன்னார்.

இந்த அடிப்படை வசதித் திட்டங்களை அமல்படுத்துவதற்கு பெரிதும்
துணை புரிந்த அனைத்துத் தரப்பினருக்கும் தாம் நன்றி தெரிவித்துக்
கொள்வதாக அவர் மேலும் கூறினார்.


Pengarang :