SELANGOR

செந்தோசா தொகுதியில் மூத்த குடிமக்களுக்கான பூங்கா – RM50,000 ஒதுக்கீட்டில்

ஷா ஆலம், ஜூலை 13: கடந்த மாதம் தாமான் செந்தோசா ஜாலான் அப்துல் ஹமீட் 25, கிள்ளானில், மூத்த குடிமக்கள் பூங்கா சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட RM50,000 ஒதுக்கீட்டில் கட்டி முடிக்கப்பட்டது.

 

இந்த வசதி மூத்த குடிமக்கள் ஓய்வு நேர நடவடிக்கைகளில் ஈடுப் படவும் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கவும் பயன்படும் என்று நம்புவதாகச் செந்தோசா தொகுதியின் பொறுப்பாளர் டாக்டர் ஜி குணராஜ் கூறினார்.

 

” இப்பகுதியில் பல வயதானவர்கள் இருப்பதனால் இப் பூங்கா கட்டப்பட்டதாக அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார். மேலும், பூங்காவில் 300 மீட்டர் நீளமான ஜாகிங் டிராக், ஆறு சிறப்பு உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் எட்டு நாற்காலிகள் உள்ளன எனக் குறிப்பிட்டார்.

“தற்போது இந்த பூங்கா பொதுமக்கள் பயன் படுத்துவதற்குத் தயார் நிலையில் உள்ளது. ஆனால், அதே நேரத்தில், அவ்விடத்தை அழகு படுத்துவதற்கான இரண்டாம் கட்ட திட்டமும் நடந்து வருகிறது,” என்று அவர் கூறினார்.


Pengarang :