SELANGOR

மாநிலத் தேர்தலில் கெடிலான் கட்சியில் வெற்றி பெறக்கூடிய இளம் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர்

ஷா ஆலம், ஜூலை 13: மாநிலத் தேர்தலில் (பிஆர்என்) சிலாங்கூர் மக்கள் நீதிக் கட்சியில் (கெடிலான்) வெற்றி பெறக்கூடிய இளம் வேட்பாளர்கள்  இருப்பார்.

 

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சிறந்த சேவையை வழங்குவதையும் வளர்ச்சியைக் கொண்டு வருவதையும் உறுதி செய்வதற்கு இரண்டு அம்சங்களும் (வெற்றி வாய்ப்பு, இளம் வேட்பாளர்) முக்கியம் என்று கெடிலான்  உதவித் தலைவர் கூறினார்.

 

இதற்கு முன் பதவியில் இருந்தவர்கள், பதிவு செய்த சிறப்பான செயல்பாட்டின் அடிப்படையில் அதே பகுதியில் தங்களின் பதவியை தக்க வைத்துக் கொள்ள கட்சி எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி விளக்கினார்.

 

“வெற்றி பெறுவதே முக்கிய நோக்கமாகும். வேட்பாளர் புதியவராக இருந்தாலும் வெற்றி பெற முடியும் என்றால், நாங்கள் அவர்களை நிறுத்துவோம்.  நானே 28 வயதில் போட்டியிட்டேன் எனக் குறிப்பிட்டார்.

 

“கமிட்டி மூலம் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவதால், வேட்பாளர்கள்  குறித்து முடிவு எடுக்க ஜூலை 16 முதல், வேட்பாளர் பட்டியலை பார்க்கக் கட்சி கூட்டம் நடத்தப்படும்,”  நிலை இப்படி இருக்க, இதுதான்  கட்சியின் வேட்பாளர் பட்டியல்  என குறுஞ்செய்தி  பரப்பும் குழுவினருக்கு, யார் வேட்பாளர் என்பது எப்படி தெரியும்   என்றார்.


சிலாங்கூர், கெடா, கிளந்தான், திரங்கானு, பினாங்கு மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய ஆறு மாநிலங்களுக்கு ஆகஸ்ட் 12ஆம் தேதியை வாக்களிக்கும் நாளாக தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது.


Pengarang :