இம்மாநிலத்தின் வெற்றி மக்கள் ஒற்றுமைக்கு  கிடைத்த வெற்றி, சிலாங்கூர் மாநிலத்தில் மூவின மக்களும் ஒற்றுமைக்கு சவால் விடும் கூட்டம் நல்ல ஆட்சியை வழங்க முடியுமா?

செய்திகள் ;- மா. சிவகுமார்
கோலசிலாங்கூர் ஜூலை 13 ;- கடந்த காலங்களில் இம்மாநில மக்களுக்கு  பல  வழிகளில் நாம் உதவி செய்து வந்துள்ளோம். அதோடு நல்ல பல திட்டங்களை இங்கே  கொண்டு வந்துள்ளோம். இதில் பலர் பயணடைந்து உள்ளனர் என்பது இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

எதிர்வரும் ஆகஸ்ட் 12 -ஆம் தேதி  6 -மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது.  ஓட்டு  போடுவது உங்கள் உரிமை மக்களாகிய நீங்கள் செய்ய போகும் நல்ல முடிவு உங்களை மட்டும் பாதிப்பதில்லை, அது நாட்டுக்கு பயனான ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் அவா.

இதுவரை மக்களுக்கு கிடைத்துள்ள பல்வேறு அனுகூலங்கள், கடந்த காலங்களில் நம் மக்கள்  கடந்து வந்த  இக்கட்டுகளை  சீர்தூக்கிப் பார்த்து உங்கள் ஓட்டை  யாருக்கு,  எந்த கட்சிக்கு போட வேண்டும்  என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் என்று சிலாங்கூர் மாநில காபந்து அரசின் மந்திரி புசார்  டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி  கோல சிலாங்கூரில்  நடைபெற்ற  மடாணி தேர்தல் பயணத்தின்  போது அவர்  கேட்டுக்கொண்டார்.

இந்த மாநிலத்தின் வளர்ச்சி , இம்மாநில மக்களிடம் நிலவும்  ஒற்றுமைக்கு கிடைத்த   வெற்றி. ஆக நாம்  தொடர்ந்து வெற்றிப் பெற, மாநிலம் வளர்ச்சி பெற  இங்குள்ள  எல்லா மக்களிடமும்  ஒற்றுமையை  வளர்த்து  மாநிலத்தை மேம்படுத்த வேண்டும். ஆனால் , நம்மை  எதிர்ப்பவர்கள், இங்கே ஆட்சி அமைக்க  துடிப்பவர்கள், மக்களின் ஒற்றுமைக்கு  எதிராக பேசி வருவதை நீங்கள்  நன்கு அறிவீர்கள்.  அவர்கள் ஆட்சி அமைத்தால்   இங்குள்ள ஒற்றுமையை மட்டும்  நாம் இழக்க மாட்டோம். அதனுடன்  இம்மாநில வளமும் அழிக்கப்பட்டு விடும்.

இதை மக்கள்  நன்கு அறிவார்கள், அதனால்  இந்த தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் -பாரிசான் கூட்டணி  வெற்றி பெற்று சிலாங்கூரை கைப்பற்ற முடியும் என்று  அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஹராப்பானின் ஒரு புதிய எழுச்சி மிக்க அணி, அனுபவம் ஆற்றல் கொண்ட பாரிசானுடன் இணைந்து இத் தேர்தலில்  பணியாற்றுவதால்  நாம்  சிறந்த வெற்றியை அடைய முடியும் என்று  உற்சாகமுடன் நம்பிக்கை தெரிவித்தார்  அமிருடின் ஷாரி.

கடந்த 5 ஆண்டுகளில் பல முறை மாநிலத்தை வளம் வந்துள்ளதாகவும்,  எல்லா மாவட்டங்களிலும் நிலவக்கூடிய பிரச்சனைகள் குறித்து ஆங்காங்குள்ள சட்டமன்ற   உறுப்பினர்களுடன் இணைந்து  அப் பிரச்சனைகளை தீர்க்க பக்கத்தான் மாநில  அரசு பாடு பட்டுள்ளதாக  கூறினார்  அமிருடின் ஷாரி


Pengarang :