SELANGOR

 ‘செலயாங்கை ஆராய்வோம்’ புதையல் வேட்டை போட்டியில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு

ஷா ஆலம், ஜூலை 18: செலாயாங் நகராண்மை கழகத்தால் (எம்பிஎஸ்) ஆகஸ்ட் 27 அன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘செலயாங்கை ஆராய்வோம்’ புதையல் வேட்டை போட்டியில் பங்கேற்கப் பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள்.

காலை 6.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் இப்போட்டியில் 50 குழுக்கள் பங்கேற்கலாம். ஒரு குழுவிற்கு RM150 பங்கேற்பு கட்டணமாக வசூலிக்கப்படும் என செலாயாங் நகராண்மை கழகக் கார்ப்பரேட் துறையின் துணை இயக்குனர் தெரிவித்தார்.

“இந்தப் போட்டியில் முதல் 50 குழுக்குகளுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படும். ஒவ்வொரு குழுவிலும் நான்கு பங்கேற்பாளர்கள் இருக்க வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் ஒரு பெண் பங்கேற்பாளர் தேவை” என்று அஹ்மத் ஃபௌசி இஷாக் கூறினார்.

முன்னதாக, இதே போட்டி 2018 இல் ஏற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. செலாயாங் நகராண்மைக் கழகத்தின் கீழ் உள்ள இடங்களின் தனித்துவத்தை அறிமுகப்படுத்துதல் மற்றும் சுவாரஸ்யமான சுற்றுலா இடங்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இப்போட்டி தொற்றுநோய் முடிவுக்கு வந்த பிறகு மீண்டும் இவ்வாண்டு நடத்தப்படுகிறது.

“பங்கேற்பாளர்கள் ஆராயும் பகுதிகளில் கோம்பாக், பத்து கேவ்ஸ், பத்து அராங், ரவாங், குவாங் மற்றும் பண்டார் பாரு செலாயாங் ஆகியவை அடங்கும். ஒவ்வொரு இடத்தின் தனித்துவத்தின் அடிப்படையில் இப்பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன,” என்று அவர் கூறினார்.


Pengarang :