NATIONAL

சட்டவிரோதச் சுரங்க நடவடிக்கை – கெடா எம்.பி.ஐ. அதிகாரி, நிறுவன இயக்குநர் கைது

கோலாலம்பூர், ஜூலை 20 – கெடா மந்திரி புசார் கழகத்தின் (எம்.பி.ஐ.) மூத்த அதிகாரி மற்றும் ஒரு நிறுவனத்தின் பெண் இயக்குநர் ஆகியோர் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணையில் உதவுவதற்காகக் கைது செய்யப்பட்டனர்.

அறுபத்து மூன்று மற்றும் 40 வயதுடைய சந்தேக நபர்கள் நேற்று முன்தினம் இரவு அலோர் ஸ்டார் மற்றும் கோலாலம்பூரில் கைது செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை ஜூலை 21 வரை மூன்று நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய (எம்.ஏ.சி.சி.) வட்டாரம் கூறியது .

அலோர்ஸ்டார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் வான் ஷாஹிதா அப்துல் ரஹீம் மற்றும் ஷா ஆலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நோர்ஸ்யாகிரா மாஜிஸ்திரேட் சே ஹாஷிம் ஆகியோர் இந்த தடுப்புக் காவல் உத்தரவை பிறப்பித்தனர்.

சம்பந்தப்பட்ட நிறுவனம் கடந்த 2020 முதல் சில அதிகாரிகளின் பாதுகாப்பைப்
பெற்று சட்டவிரோதச் சுரங்க நடவடிக்கைகளை மேற்கொண்டதாக நம்பப்படுகிறது மற்றும் கடந்த 2020 மற்றும் 2023 க்கு இடைப்பட்ட காலத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளைப் பாதுகாப்பதற்காகச் சம்பந்தப்பட்ட நிறுவனம் ரிங்கிட் 1
கோடியே 30 லட்சம் வெள்ளிக்கும் அதிகமான தொகையை லஞ்சமாகக்
கொடுத்ததாக சந்தேகிக்கப்படுகிறது என்று அந்த வட்டாரம் பெர்னாமாவிடம் தெரிவித்தது.

அந்த பெண்ணுக்குச் சொந்தமான நிறுவனம் 2016 ஆம் ஆண்டு மாநிலத்தில் இரண்டு பகுதிகளில் டி.எல்.சி. எனப்படும் இரப்பர் பால் படியாக்கத் திட்டத்தைச் செயல்படுத்த அனுமதி பெற்றதாகக் கூறப்படுகிறது.

அது தவிர, அதே நிறுவனம் கடந்த 2020 ஆம் ஆண்டில் அதே பகுதியில் ஆர்.இ.இ. சுரங்க நடவடிக்கைகளை நடத்த கெடா அரசாங்கத்திடம் விண்ணப்பித்துள்ளது. ஆனால், இதுவரை மாநில அரசு நிறுவனத்தின் விண்ணப்பத்தை அங்கீகரிக்கவில்லை.


Pengarang :