SELANGOR

உரிமம் இல்லா 36  அங்காடி கடைகளின் பிரச்சனைக்குப் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி தீர்வு  

ஷா ஆலம், ஜூலை 20: கார் நிறுத்தும் இடம் மற்றும் பல பொது வசதிகளுடன்  36 கடைகளைத் தாமான் ரக்யாட் டாமாய் செத்தியா, டாமன்சரா டாமாய், பெட்டாலிங் ஜெயாவில் எம்பிபிஜே கட்டவுள்ளது.

ஜாலான் PJU 10/1 இல் உரிமம் பெறாத வணிகர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக இந்த கட்டுமானம் கட்டப்படுகிறது. அதாவது அசுத்தமான பகுதிகள் மற்றும் சாலையை அடைத்து கட்டப்பட்ட கட்டமைப்புகளின் சிக்கலை களைவதற்காக 36 கடைகள் கட்டப்படவுள்ளன என்று மேயர் கூறினார்.

“இந்த புதிய கட்டுமானத் தளம் பொது மற்றும் பொழுதுபோக்கு வசதிகளுக்கு ஒரு புதிய அடையாளத்தை கொடுக்கும் மற்றும் அவை பொதுமக்களுக்கு மிகவும் வசதியாகவும் அமையும்.

“மேலும், இது பொதுமக்களை ஈர்க்கும் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்த பங்களிக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று முகமட் அஸான் முகமட் அமீர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த கட்டுமானம் 6×6 மீட்டர் அளவுள்ள 30 கடைகள், 3×3 மீட்டர் அளவுள்ள ஆறு கடைகள் மற்றும் எட்டு பழ விற்பனை கடைகள் ஆகியவையை உள்ளடக்கியது என்றார்.

கூடுதலாக, இக்கட்டுமானம் 36 வாகன நிறுத்துமிடங்கள், சுராவ்கள், கழிப்பறைகள், பாதுக்காவலர் குடில் மற்றும் ஒரு விளையாட்டு வளாகம் ஆகியவற்றைக் கொண்டு இருக்கும் என்றார் அவர்.


Pengarang :