SELANGOR

குழாய் உடைந்த பிரச்சனையை உடனடியாக தீர்க்க சிலாங்கூர் நீர் மேலாண்மைக்கு உத்தரவு

ஷா ஆலம், ஜூலை 20: ப்ரிமா ஸ்ரீ கோம்பாக் அருகே உள்ள ஜாலான் உத்தாமா லெபு ஸ்ரீ கோம்பாக்கில் குழாய் உடைந்த பிரச்சனையை உடனடியாக தீர்க்க சிலாங்கூர் நீர் மேலாண்மைக்கு (சிலாங்கூர் ஆயர்) உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆயர் சிலாங்கூர் சிக்கலைத் தீர்க்க முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று காபந்து அரசின்  மந்திரி புசார் விரும்புகிறார் என்று கோம்பாக் செத்தியா தொகுதி ஒருங்கிணைப்பாளர் கூறினார்.

நேற்று சம்பவ இடத்தை பார்வையிட்ட டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, ஒரே வாரத்தில் ஏற்பட்ட இரண்டு சம்பவங்கள், உள்ளூர்வாசிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியதற்கு வருத்தம் தெரிவித்ததாக ரஹீம் காஸ்டி மேலும் கூறினார்.

“அமிருடின் எதிர்காலத்தில் இந்த பிரச்சனையைத் தீர்க்க படுவதை உறுதி செய்வார்” என்று அவர் தனது முகநூல் மூலம் தெரிவித்தார்.

முன்னதாக, ப்ரிமா ஸ்ரீ கோம்பாகில் உள்ள 838 மீட்டர் நீளமுள்ள குழாய்கள், தரம் வாய்ந்ததாக மாற்றப்படும் என்று அமிருடின் கூறினார். இப்பணியை எதிர்வரும் அக்டோபரில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் உள்ள 8.4 மில்லியன் பயனர்களுக்கு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய ஒவ்வொரு ஆண்டும் 150 கிலோமீட்டர் குழாய்கள் மாற்றப்படுகின்றன என ஆயர் சிலாங்கூர் தெரிவித்தது.

ஜனவரி 2021 வரை மொத்தம் 1,562 திட்டமிடப்பட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


Pengarang :