SELANGOR

நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள 61 இடங்களில் மரம் வெட்டும் பணி துவங்கப்பட்டன

ஷா ஆலம், ஜூலை 20: அம்பாங் பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ள 61 இடங்களில், ஜூன் 22ஆம் தேதி தொடங்கிய மரம் வெட்டும் பணி RM5.96 மில்லியன் செலவில் மேற்கொள்ளப் படுகிறது.

மாநில அரசு ஒதுக்கீட்டின் மூலம் 23 ஒப்பந்ததாரர் நிறுவனங்கள் மரத்தை வெட்டுவதில் ஈடுபட்டுள்ளன என அம்பாங் ஜெயா நகராண்மை கழகப் பொறியியலாளர் இயக்குனர் சவ்ருல் வஸ்ரி முகமட் வாவ்சி கூறினார்.

“இந்த நடவடிக்கையானது நிலச்சரிவு ஏற்படக்கூடிய நிலத்தின் சுமை மற்றும் நகர்வைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது பள்ளமான பகுதிக்கு அருகில் வசிக்கும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மாநில அரசால் ஒப்புதல் வழங்கப்பட்ட மேலாண்மை திட்டமாகும்,” என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

“முன்பு ஏப்ரல் மாதம் பணிகள் தொடங்கும் என எதிர் பார்த்தோம், ஆனால் சிறிது கால அவகாசம் தேவைப் பட்டதால் ஜூன் மாதம் பணிகள் தொடங்கப்பட்டன” என்று அவர் விளக்கினார். மேலும், இப் பணி செப்டம்பர் இறுதிக்குள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Pengarang :