NATIONAL

சிலாங்கூர் குழந்தைகள் புத்தகக் கண்காட்சியில் பல்வேறு சுவாரஸ்யமான குடும்ப நிகழ்ச்சிகள் வருகையாளர்களுக்காகக் காத்திருக்கின்றன

ஷா ஆலம், ஜூலை 20: பிகேஎன்எஸ் வளாகத்தில் ஜூலை 27 முதல் 30 வரை நடைபெறும் சிலாங்கூர் குழந்தைகள் புத்தகக் கண்காட்சியில் பல்வேறு சுவாரஸ்யமான குடும்ப நிகழ்ச்சிகள் வருகையாளர்களுக்காகக் காத்திருக்கின்றன.

இக்கண்காட்சியில் இடம்பெறும் குடும்ப நிகழ்ச்சிகள் முழுக் குடும்பத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும் மற்றும் குழந்தைகளின் மன வளர்ச்சியைத் தூண்டும் செயல்பாடுகளை கொண்டிருக்கும் என்று சிலாங்கூர் பொது நூலகக் கழகத்தின் (பிபிஏஎஸ்) கார்ப்பரேட் பிரிவின் தலைவர் கூறினார்.

” குழந்தைகளை அவர்வர் பெற்றோருடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடவடிக்கைகளில் ஈடு படலாம். இதனால் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையிலான உறவு பலப்படும்” என்று சிலாங்கூர்கினியிடம் ஜஃப்ருல்லா அரிஸ் கூறினார்.

மே 30 அன்று, வாசிப்பு கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக முதல் முறையாகக் குழந்தைகள் புத்தகக் கண்காட்சியை மாநில அரசு நடத்துகிறது என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்தார்.

கடந்த 16 ஆண்டுகளாக, மாநில அரசு சிலாங்கூர் புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகிறது மற்றும் அண்டை நாடுகளின் பங்கேற்பைத் தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் முறை சிலாங்கூர் சர்வதேசப் புத்தகக் கண்காட்சியை (SIBF) ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது.


Pengarang :