SELANGOR

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கோவிட்-19 நோயாளிகளுக்கும் ஸ்மார்ட் சிலாங்கூர் பஸ் சேவை வழி உதவி

ஷா ஆலம், ஜூலை 20- பொது போக்குவரத்துக் கட்டணம் அபரிமித
உயர்வு கண்டுள்ள இக்காலக்கட்டத்தில் சிலாங்கூர் அரசின் ஸ்மார்ட்
சிலாங்கூர் இலவச பஸ் சேவைக்கு பொது மக்கள் மத்தியில் அமோக
ஆதரவு கிடைத்துள்ளது வியப்பான விஷயமல்ல.

கடந்த 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த இலவச பஸ் சேவையை
மாநிலம் முழுவதும் உள்ள 12 ஊராட்சி மன்றங்கள் வழி நடத்தி
வருகின்றன. (கடந்த 2022 செப்டம்பர் வரை) மொத்தம் 166 பஸ்கள் 52
தடஙகளில் சேவையை வழங்கி வருகின்றன.

உள்நாட்டினர் இந்த சேவையை இலவசமாகப் பயன்படுத்துவதற்கு
அனுமதிக்கப்படும் வேளையில் அந்நிய நாட்டினருக்குப் பயணக்
கட்டணமாக 90 காசு வசூலிக்கப்படுகிறது. இதர பொது போக்குவரத்துச்
சேவைகளைக் காட்டிலும் இது மிகவும் குறைந்த கட்டணமாகவே
விளங்குகிறது.

அன்றாடம் பயணிகளை ஏற்றும் சேவையை மட்டுமல்லாது கோவிட்-19
பெருந்தொற்றுக் காலத்தில் நோய்த் தொற்று உள்ளவர்கள் மற்றும்
பணியாளர்களை தனிமைப்படுத்தும் மையங்களுக்கு கொண்டுச்
செல்வதற்கும் தடுப்பூசி பெறுவோரை தடுப்பூசி மையங்களுக்கு கொண்டுச்
செல்வதற்கும் இந்த பஸ் சேவை பெரிதும் உதவியது.

கடந்த 2021ஆம் ஆண்டில் தாமான் ஸ்ரீ மூடாவில் வெள்ளம் ஏற்பட்ட போது
வட்டார மக்களின் போக்குவரத்து வசதிக்காக அப்பகுதியில் ஸ்மார்ட்
சிலாங்கூர் பஸ்கள் இலவசச் சேவையை வழங்கின.


Pengarang :