SELANGOR

பத்தாங் காலி தொகுதி பல்வேறு அமைப்புகளுக்கு மொத்தம் RM113,150 வழங்கியது

ஷா ஆலம், ஜூலை 20: சமூகத்தின் உடனடித் தேவைகள் மற்றும் நீண்ட கால வளர்ச்சியைப் பூர்த்தி செய்வதற்காக பத்தாங் காலி தொகுதி பல்வேறு அமைப்புகளுக்கு மொத்தம் RM113,150 வழங்கியது.

கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்வாதார கூறுகள் சம்பந்தப்பட்ட உதவிகள் தேவைப்படும் தனி நபர்களுக்குக் காசோலைகள் மற்றும் நன்கொடைகள் வழங்கப்பட்டதாக அதன் ஒருங்கிணைப்பாளர் சைபுடின் ஷாபி முஹம்மது தெரிவித்தார்.

அதுமட்டுமில்லாமல், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி நிர்வாகம், குடியிருப்போர் சங்கங்கள், கூட்டு மேலாண்மை அமைப்புகள் (JMB), சுராவ் மற்றும் மசூதிகள் ஆகியவைக்கும் நிதி உதவிகள் வழங்கப்பட்டன.

“உடனடித் தேவைகள் மற்றும் சமூகத்திற்குத் தேவையான நீண்ட கால வளர்ச்சியைப் பூர்த்தி செய்ய இந்த நன்கொடை மற்றும் உதவிகள் பெரிதும் துணை புரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“சமூக ஆதரவு அமைப்பு வலுவாக இருந்தால், மேம்பாட்டுத் திட்டம் எளிதாக இருக்கும்,” என்று அவர் முகநூலில் தெரிவித்தார்.


Pengarang :