ANTARABANGSA

கார் ஒன்று மரக்கட்டை ஏற்றிச் சென்ற லாரி மீது மோதிய சம்பவத்தில் இருவர் பலி

குவா முசாங், ஜூலை 21: நேற்று மாலை 6.15 மணியளவில் ஜாலான் குவா முசாங்-ஜெலி கிலோமீட்டர் 37யில் கார் ஒன்று மரக்கட்டை ஏற்றிச் சென்ற லாரி மீது மோதிய சம்பவத்தில் இருவர் உயிரிழந்த வேளையில் ஒருவர் காயமடைந்தார்.

ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரியும் முகமது ஜூகி முகமது அலி (55), மற்றும் அவரது மகன் முஹம்மது ஹஸ்புல்லா (15) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இன்னொரு மகன், முகமது ஹுசைஃபாவிற்கு (18) மார்பில் பலத்த காயம் ஏற்பட்டது என

குவா முசாங் மாவட்டக் காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் சிக் சூன் ஃபூ கூறினார்.

“அம்மூவரும் குவா முசாங்கில் இருந்து ஜெலிக்குச் சென்று கொண்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

“பாதிக்கப்பட்டவரின் வாகனம் சற்று வளைந்த சாலை வழியாக செல்லும் போது எதிர் திசையில் வந்த மரக்கட்டைகளை ஏற்றிச் சென்ற லாரியின் பாதையில் நுழைந்ததால் இரண்டு வாகனங்களும் மோதியதாக நம்பப்படுகிறது,” என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இறந்தவர்களின் உடல்கள் குவா முசாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், லாரி ஓட்டுநருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.

“சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 41(1)ன்ப கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது,” என்றார்.

– பெர்னாமா


Pengarang :