SELANGOR

சிலாங்கூர் இலவசப் பிரத்தியேக வகுப்பு மாதிரி  தேர்வு  பயிற்சி மொடியூல்  புத்தகங்கள் 260 பள்ளிகளுக்கு வழங்கப்படும்

ஷா ஆலம், ஜூலை 21: எம்பிஐ ஆல் சிலாங்கூர் இலவசப் பிரத்தியேக வகுப்பு திட்டதிற்கான மொடியூல் புத்தகங்கள் 260 பள்ளிகளுக்கு வழங்கும் நடவடிக்கை இம்மாத இறுதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு 65,000 எஸ்பிஎம் மாணவர்கள் சிறந்த முடிவுகளை அடைய இந்த திட்டம் உதவியது என்று அதன் பெருநிறுவன சமூகப் பொறுப்பு தலைவர் கூறினார்.

“மலேசிய கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள 256 பள்ளிகள் மற்றும் நான்கு மஹாத் இன்டெக்ராசி தஹ்ஃபிஸ் பள்ளிகள் இந்த மொடியூலைப் பெற்றன.

“இது மலாய், ஆங்கிலம், கணிதம், வரலாறு, அறிவியல் மற்றும் கூடுதல் கணிதம் ஆகிய பாடங்களுக்கான 334,000 மொடியூல்களை உள்ளடக்கியது” என்று அஹ்மட் அஸ்ரி சைனல் நோர் கூறினார்.

பெட்டாலிங் மாவட்டத்தில் உள்ள 46 பள்ளிகளுக்கான மொடியூலை செக்‌ஷன் 18யில் உள்ள இடைநிலைப்பள்ளியில் வழங்கிய பிறகு பேசிய அவர், ஆகஸ்ட் தொடக்கத்தில் பிரத்தியேக வகுப்புகள் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு, இந்த திட்டத்தை வெற்றியடைய செய்வதன் மூலம் http://ePTRS.my போர்ட்டலை வலுப்படுத்தவும், ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்தவும் RM7 மில்லியன் ஒதுக்கப்பட்டது.

கோவிட்-19 தொற்றுநோயால் நாடு பாதிக்கப்பட்டபோது மாணவர்களுக்கு உதவுவதற்காக இந்த திட்டம் இணையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.


Pengarang :