SELANGOR

சிலாங்கூர் சிறப்பு குழந்தைகளுக்கான ஆரம்பக் கல்வி உதவி மையத்தின் பட்டமளிப்பு விழா

ஷா ஆலம், ஜூலை 21: சிலாங்கூர் சிறப்பு குழந்தைகளுக்கான ஆரம்பக் கல்வி உதவி மையத்தின் (அனிஸ் மையம்) பட்டமளிப்பு விழா இரண்டாம் முறையாக இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

ஆறு வயதுக்குட்பட்ட 28 மாணவர்களை உள்ளடக்கிய இந்த விழா இங்குள்ள ராஜா துன் உடா நூலக ஆடிட்டோரியத்தில் நடைபெற்றவுள்ளதாக அனிஸ் துறைத் தலைவர் டேனியல் அல்-ரஷித் ஹரோன் தெரிவித்தார்

“இந்த நிகழ்வை பெண்கள் மற்றும் குடும்ப அதிகாரத் துறை பொறுப்பு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மஹ்மூத் அவர்கள் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைப்பார்.

2021 இல் நிறுவப் பட்டதிலிருந்து, மொத்தம் 140 பேர் இந்த மையத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த நிகழ்வானது மாணவர்களின் வெற்றி மற்றும் சிறந்த சாதனைகளை அங்கீகரிக்கும்.

“சிறப்புக் குழந்தைகளின் நலனைக் கவனிப்பது உட்பட, தரமான மற்றும் மனிதாபிமான கல்வியை வழங்குவதற்கான மாநில அரசின் உறுதிப் பாட்டிற்கு இந்த நிகழ்வு சான்றாகும்” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

சிறப்பு குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் தன்னம்பிக்கையை வளர்ப்பதில் அனிஸின் வெற்றியையும் இந்த விழா காட்டுகிறது என்றார் டேனியல்.

“இதனால் அனிஸ் மையம் தொடர்ந்து முன்னேறி, சிறப்புக் குழந்தைகளுக்குச் சிறந்த கல்வியை வழங்கும்,” என்று அவர் கூறினார்.


Pengarang :