SELANGOR

புக்கிட் பெருந்தோங் சுரங்கப்பாதையில் எட்டு சோலார் விளக்குகள் நிறுவப்பட்டுள்ளன

ஷா ஆலம், ஜூலை 23 : புக்கிட் பெருந்தோங், உலு சிலாங்கூரில் உள்ள சுரங்கப்பாதை வழி செல்லும் இஸ்லாமிய கல்லறைக்குச் செல்ல  RM20,799 செலவில் 336 மீட்டர் நீளமுள்ள சாலை அமைக்கப்பட்டது.

சுரங்கப்பாதை குறிப்பாக இரவில் வெளிச்சமாக இருக்க அப்பகுதியில் எட்டு சோலார் விளக்குகள் நிறுவப்பட்டுள்ளன என பத்தாங் காலி தொகுதி ஒருங்கிணைப்பாளர் சைஃபுடின் ஷாபி முஹம்மட் கூறினார்.

“இப்போது சுரங்கப்பாதையில் சேதமடைந்து தண்ணீர் தேங்கி இருந்த சாலை சரி செய்யப்பட்டுள்ளது, அதே நேரத்தில் சுரங்கப்பாதை வெளிச்சமாக இருக்கிறது.

“இவ்வாண்டு மாநில அரசின் பழுதுபார்ப்பு ஒதுக்கீட்டின் ஒரு பகுதி இந்த மேம்பாடு நடவடிக்கைக்குப் பயன்படுத்தப்பட்டது” என்று அவர் முகநூலில் தெரிவித்தார்.

இந்த வசதி, புக்கிட் பெருந்தோங் மற்றும் புக்கிட் செந்தோசாவைச் சுற்றியுள்ள மயான ஊழியர்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரும் கல்லறைக்குச் செல்வதை எளிதாக்கும் என்று சைபுடின் ஷாஃபி நம்புகிறார்.


Pengarang :