EKSKLUSIF

கெஅடிலான் போட்டியிடும் 61 இடங்களில் 5ல் இந்தியர்களுக்கு வாய்ப்பு- ஒன்றுப்பட்டு வெற்றியை அளிப்போம்

செய்தி  – சு.சுப்பையா

 

ஷா ஆலம். ஜூலை.22-  6 மாநில சட்டமன்ற தேர்தலில் 61 தொகுதிகளில் கெ அடிலான் கட்சியின் வேட்பாளர்கள் களத்தில் இறக்கியுள்ளார் கெ அடிலான் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம். இந்த வேட்பாளர் பட்டியல் மிகவும்   விரு விருப்புடனும் ஷா ஆலம் செக்சன் 7லில் உள்ள பிரதான மைதானத்தில் ஆயிரக்கணக்கான கெ அடிலான் தொண்டர்கள் சூழ அறிவிக்கப் பட்டது. இந்த 61 வேட்பாளர்களில் ஐவர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வேட்பாளர் பட்டியலில் சிலாங்கூர் மாநிலம் முதலிடம் வகிக்கிறது. என்.10 புக்கிட் மெலாவத்தி சட்ட மன்ற தொகுதியில் புது முகம் தீபன் சுப்ரமணியம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மைதானத்தில் கூடியிருந்த பெரும்பான்மையானவர்கள் மகிழ்ச்சி கடலில் ஆரவாரம் செய்தனர்.

தீபன் சுப்ரமணியம் கெ அடிலான் கட்சியில் இளைஞர் பிரிவில் தனது அரசியல் சேவையை தொடங்கியவர். புக்கிட் மெலாவத்தி சட்ட மன்றம் மீண்டும் இந்தியர் கை வசம் திரும்பியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிலாங்கூரில் மற்றொரு தொகுதி செந்தோசா சட்ட மன்றமாகும். இத்தொகுதியில் மீண்டும் 2வது தவணையாக டாக்டர் குணராஜ் வேட்பாளராக களத்தில் இறக்க பட்டுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக சிறப்பான சேவையின் வழி தொகுதி மக்களின் செல்வாக்கை பெற்று வெற்றி வேட்பாளாராக வலம் வருகிறார்.

கெ அடிலான் கட்சியின் சார்பில் கெடா மாநிலத்தில் புக்கிட் செலம்பாவ் சட்ட மன்ற தொகுதி மிக நீண்ட காலமாக இந்தியர்கள் போட்டியிடும் தொகுதியாகும். இந்த தேர்தலில் இத்தொகுதியில் கெ அடிலான் கட்சியை சார்பில் சுந்தரராஜு இராமன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


Pengarang :