NATIONAL

நெகிரி செம்பிலானில் 11 தொகுதிகளில் ஜசெக போட்டி- குணசேகரன், வீரப்பன், அருள் குமாருக்கு மீண்டும் வாய்ப்பு

சிரம்பான், ஜூலை 24- அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் தேர்தலில்
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் போட்டியிடவிருக்கும் ஒரு புதுமுகம்
உள்ளிட்ட 11 வேட்பாளர்களின் பெயரை ஜசெக நேற்றிரவு வெளியிட்டது.

இந்த தேர்தலில் நீலாய் தொகுதியில் ஜே. அருள்குமாரும் சிரம்பான் ஜெயா
தொகுதியில் பி. குணசேகரனும் ரெப்பா தொகுதியில் எஸ்.வீரப்பனும்
மீண்டும் போட்டியிடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜசெகவின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கட்சியின் தலைமைச்
செயலாளர் அந்தோணி லோக், இத்தேர்தலில் சென்னா சட்டமன்றத்
தொகுதியைத் தாம் மீண்டும் தற்காத்துக் கொள்ளவுள்ளதாகக் கூறினார்.

ரஹாங் தொகுதியில் புது முகமான டெஸ்மண்ட் சியான் மியோவ்
போட்டியிடவுள்ள வேளையில் பகாவ் தொகுதியில் தியோ கோக்
சியோங்கும் லோபாக் தொகுதியில் சியு செ யோங்கும், மம்பாவ்
தொகுதியில் யாப் இயோ வேங்கும் லுக்குட் தொகுதியில் சூ கெ
ஹூவாவும் களம் காண்கின்றனர் என அவர் தெரிவித்தார்.

கடந்த 2018 பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி நெகிரி
செம்பிலான் மாநிலத்தை வெற்றி கொண்டது. நெகிரி செம்பிலான் எனது
பூர்வீகம். நான் வளர்ந்ததும் அரசியலில் என்னை வளர்த்ததும் இந்த
மாநிலம்தான். இந்த மாநிலம் எனது மனதுக்கு நெருக்கமானது என்றார்
அவர்.

பத்து தொகுதிகளில் பழைய முகங்கள் போட்டியிடுகின்றனர். ரஹாங்கில்
மட்டுமே புதுமுகம் களமிறக்கப்பட்டுள்ளார். ஜசெக வேட்பாளர்களில் பலர்
இளைஞர்களே. அவர்கள் 30 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களாவர் என்று
அவர் சொன்னார்.


Pengarang :