SELANGOR

9,000க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு RM8.9 மில்லியன் ஒதுக்கீடு

ஷா ஆலம், ஜூலை 27: மாநில அரசு இந்த ஆண்டு 9,000க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு RM8.9 மில்லியன் செலவிட்டுள்ளது.

சிறந்த பயிர் விளைச்சலை உறுதி செய்யும் வகையில் இந்த ஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையில் விவசாயிகளின்  வருமானம் அதிகரிக்கும் என விவசாயத் துறை பொறுப்பு உறுப்பினர் இஷாம் அசிம் கூறினார்.

“விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஹெக்டேருக்கும் RM300 ரொக்கம் அளிப்பதோடு RM200 மதிப்புள்ள விதைகளும் வழங்கப்படும். இதன் மூலம் நெல் விளைச்சலை அதிகரிக்க முடியும்.

“சிலாங்கூர் அரசாங்கம் விவசாயிகள் உட்பட யாரையும் ஒருபோதும் புறக்கணிக்கவில்லை என்பதற்கு இது ஒரு சான்றாகும், ஏனெனில் மாநிலத்தின் பொருளாதாரத்தை அனைத்து குடியிருப்பாளர்களும் அனுபவிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

பயிர் விளைச்சலை அதிகரிக்க கற்றுத் தந்த அனைத்து முறைகளையும் கடைப்பிடிக்குமாறு விவசாயிகளை, குறிப்பாக திட்டத்தை பின்பற்றும் இளைஞர்களை இஷாம் வலியுறுத்தினார்.

“விவசாயம் உட்பட அனைத்து துறைகளுக்கும் அதன் பற்றிய அறிவு தேவை. நெல் சாகுபடியின் சரியான முறை பற்றி இந்த திட்டத்தில் கற்று கொடுப்பதன் மூலம் அவர்கள் திறமையான விவசாயிகளாக மாறுவதற்கு தங்களை ஒழுங்குபடுத்த இயலும்.

“இந்த திட்டத்தில் பகிர்ந்து கொள்ளப்படும் தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பயன்படுத்தி, உங்கள் செயல்திறன், பயிர் விளைச்சல் மற்றும் வருமானத்தையும் அதிகரிக்க முடியும்,” என்று அவர் கூறினார்.


Pengarang :