NATIONAL

சிலாங்கூரில் வேட்பாளர்களைப் பரிந்துரைக்கும் செயல்முறை சுமூகமாக நடைபெற்றது

கோம்பாக், ஜூலை 29: சிலாங்கூரில் மாநிலத் தேர்தலுக்கு (பிஆர்என்) வேட்பாளர்களை பரிந்துரைக்கும் செயல்முறை சுமூகமாக நடந்ததாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் கூறினார்.

ஆதரவாளர்கள் குழு, நியமன மையத்தில் அமைக்கப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்கி செயல் பட்டதால், முழு செயல்முறையும் கட்டுப்பாட்டில் இருப்பதாக டத்தோ ஹுசைன் ஓமர் கான் கூறினார்.

“இன்று காலை 10.30 மணி நிலவரப்படி நிலைமை சுமூகமாக உள்ளது மற்றும் அனைத்து செயல்முறைகளும் நல்ல முறையில் நடந்து வருகின்றன.

“எல்லாம் நன்றாக நடக்கிறது,” என்று அவர் இன்று சுங்கை பூசு இடைநிலைப்பள்ளியில் உள்ள வேட்பாளர் நியமன மையத்தில் சந்தித்தபோது, பெரிட்டா ஹரியானிடம் தெரிவித்தார்.

கோம்பாக் மாவட்டத்தில் இரண்டு மையங்களில் 400 உறுப்பினர்களை, அதாவது சுங்கை பூசு இடைநிலைப்பள்ளியில் 220 பேரும், செலாயாங் நகராண்மை கழகத்தில் (எம்பிஎஸ்) 180 பேரையும் காவல் துறை நியமித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

“எங்களிடம் தெம்பூர் ரிங்கான் குழு (எல்எஸ்எஃப்) இரண்டு பிரிவுகள் உள்ளன, அவை அருகே உள்ள பகுதியில் தயாராக உள்ளன. மேலும் கோம்பாக் மாவட்டக் காவல்துறை தலைமையகத்தில் பெடரல் ரிசர்வ் யூனிட்டின் (எஃப்ஆர்யு) ஒரு பிரிவு உள்ளது,” என்று அவர் கூறினார்.


Pengarang :