SELANGOR

நெருக்கடியை எதிர் கொண்ட போதிலும் சிலாங்கூர் சாதனைகளைப் புரிந்துள்ளது

ஷா ஆலம், ஜூலை 29: வரலாற்றில் மிகவும் சவாலான நெருக்கடியை எதிர் கொண்ட போதிலும் சிலாங்கூர் நிர்வாகம் ஐந்தாண்டு காலத்தில் புகழ்பெற்ற சாதனைகளைப் புரிந்துள்ளன.

சுகாதாரம், பொருளாதாரம் மற்றும்  மத்திய அரசின்  நிலை தன்மையற்ற  ஆட்சி  நெருக்கடியில் இருந்து மாநில நிர்வாகத்தால் எழ முடிந்தது என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“பக்காத்தான் ஹராப்பான் அரசாங்க நிர்வாகத்தின் கீழ் மக்கள் பாதுகாக்கப்படுகின்றனர் என்று வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் ஜூலை 28 அன்று கூறினார்.

மேலும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிலாங்கூர் மிகப்பெரிய பங்களிப்பாளராக இருக்கிறது அதாவது 2022 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரத்தில் கால் பகுதிக்கு மேல் (25.5 சதவிகிதம்) பங்களித்துள்ளது என்று தனது ட்விட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சிலாங்கூரை நாட்டின் பொருளாதார இயந்திரமாகவும், தென்கிழக்கு ஆசியாவின் அடுத்த சிறந்த மாநிலமாகவும் மாற்றுவதற்கு அரசு ஊழியர்கள் உட்பட விடாமுயற்சி மற்றும் குழு திட்டமிடலின் விளைவுதான் இந்த வெற்றிக்குக் காரணம் என்றார்.

கைக் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவச குடிநீர் வழங்குதல், தடுப்பூசிகள் மற்றும் காப்பீடு வழங்குதல் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் மாநிலக் கையிருப்பு மக்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது என்றார்.

“சிலாங்கூர் செழிக்கவும், பொருளாதாரத்தை இயக்கவும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மக்களை மேம்படுத்தவும் நாங்கள் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம்” என்று மாநில ஹராப்பான் தலைவர் கூறினார்.


Pengarang :