SELANGOR

80 சதவீதம் வரை அபராதக் குறைப்பு – செலாயாங் நகராண்மை கழகம்

கோம்பாக், ஜூலை 29: செலாயாங் நகராண்மை கழகம், (எம்பிஎஸ்) ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 31 வரை குற்றத்தின் வகையைப் பொறுத்து 80 சதவீதம் வரை அபராதம் குறைப்பு வழங்குகிறது.

சட்டம் மற்றும் விதிகளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த அபாரதக் குறைப்பு பொதுமக்கள் தங்கள் நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது என்று தலைவர் கூறினார்.

மேல்முறையீட்டு மற்றும் சரிபார்த்தல் போன்ற நடவடிக்கைகளை செலாயாங் நகராண்மை கழகம் சட்டத் துறையின் மேல்முறையீட்டு கவுண்டரில் மேற்கொள்ளலாம் என என்று எம்பிஎஸ் மாதாந்திர கூட்டத்தில் டத்தோ முகமட் யாசிட் சாய்ரி கூறினார்.

ஜூன் 30 வரை, செலாயாங் நகராண்மை கழகம், RM57 மில்லியனில் RM52.39 மில்லியனை அல்லது 91.91 சதவீதத்தை மதிப்பீட்டு வரியாக வசூலித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

மேலும், RM12 மில்லியனாக இருந்து மொத்த நிலுவைத் தொகையில் RM7.98 மில்லியன் அல்லது 66.48 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றார்.

கடந்த ஜனவரி தொடங்கி, செலாயாங் நகராண்மை கழகம் “Lazada, Shopee“ மற்றும் “Cepat “ ஆகிய இணையத் தளங்களில் மதிப்பீட்டு வரியைச் செலுத்தும் பிரச்சாரத்தையும் நடத்தியது.


Pengarang :