SELANGOR

கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதியில் அதிசயம்- மூன்று ஹராப்பான் வேட்பாளர்களுக்கும் வாக்குச் சீட்டில் ‘1‘ ஆம் எண்

ஷா ஆலம், ஜூலை 31- கோத்தா ராஜா நாடாமன்றத் தொகுதிக்குட்பட்ட
மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடும் மூன்று பக்கத்தான்
ஹராப்பான் வேட்பாளர்களுக்கும் வாக்குச் சீட்டில் 1 ஆம் எண்
கிடைத்துள்ளது.

செந்தோசா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் டாக்டர் குணராஜ்
ஜோர்ஜ், சுங்கை காண்டீஸ் தொகுதியில் போட்டியிடும் முகமது ஜவாவி
அகமது முக்னி மற்றும் கோத்தா கெமுனிங் தொகுதியில் போட்டியிடும்
எஸ். பிரகாஷ் ஆகிய மூவரின் பெயர்களும் வாக்குச் சீட்டில் ஒன்றாம்
இடத்தில் இடம் பெற்றுள்ளன.

கடந்த சனிக்கிழமை இங்குள்ள செக்சன் 32, புக்கிட் ரீமாவ் எம்.பி.எஸ்.ஏ.
மண்டபத்தில் நடைபெற்ற வேட்பு மனுத்தாக்கல் நிகழ்வின் போது இந்த
மூன்று வேட்பாளர்களும் வாக்குச் சீட்டில் முதல் இடம் பெற்றத் தகவலை
தேர்தல் அதிகாரி வெளியிட்டார்.

இது மட்டுமின்றி கோத்தா ராஜா தொகுதியில் கடந்த தவணையின் போது
வெற்றி பெற்ற மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் மாநில அரசின் உயர்
பதவிகளை வகிக்கும் வாய்ப்பினைப் பெற்றவர்கள் என்பதும்
குறிப்பிடத்தக்கது.

கோத்தா ராஜா சட்டமன்ற உறுப்பினராக இருந்த வீ.கணபதிராவ் மற்றும்
சுங்கை காண்டீஸ் சட்டமன்ற உறுப்பினர் முகமது ஜவாவி ஆகிய
இருவரும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களாக பதவி வகித்த
வேளையில் குணராஜ் மந்திரி  புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின்
சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

அதோ மட்டுமல்லாது கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினரும்
அமானா ராக்யாட் கட்சியின் தலைவருமான டத்தோஸ்ரீ முகமது சாபு
விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் உள்ளார்.


Pengarang :