ANTARABANGSA

கல்வியாளர்களின் தேவைகளை நிறைவு செய்ய மாநில அரசு தயாராக உள்ளது

பெட்டாலிங், ஆகஸ்ட் 1: கல்வித்துறை தொடர்ந்து வலுவூட்டப்படுவதை உறுதி செய்வதற்காகத் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பயன்பாடு உள்ளிட்ட கல்வியாளர்களின் தேவைகளை நிறைவு செய்ய மாநில அரசு தயாராக உள்ளது.

இந்த அம்சம் மாநில திட்டமிடலில் முக்கிய கவனம் செலுத்தும் ஒன்றாகும். மேலும் இது பற்றி கல்வித் துறையுடன் இன்னும் தீவிரமாக விவாதிக்கப்படும் என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

“சில ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட கல்வித் திட்டத்தில் பயிற்சிகள் உட்பட ஆசிரியர்களுக்கான உதவி ஏற்கனவே உள்ளது. உதாரணமாக ஸ்கிம் செகு அனிஸ் இஸ்திமேவா சிலாங்கூர் திட்டத்தின் மூலம் பயிற்சி வழங்கப்பட்டது.

“இதற்குப் பிறகு, சுற்றுச்சூழல் தேவைகளைப் பூர்த்தி செய்தல் மற்றும் டிஜிட்டல் பயன்பாடு உள்ளிட்ட கூடுதல் தேவைகளை நாங்கள் அறிய விரும்புகிறோம். இதில் கவனம் செலுத்தப்படும்” என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று கூறினார்.

பெட்டாலிங் பெர்டானா மாவட்டக் கல்வி அலுவலகத்தின் சிறந்த சேவைக்கான விருது வழங்கும் விழாவைத் தொடக்கி வைத்து பேசிய அமிருடின், சிலாங்கூர் இலவசப் பிரத்தியேக வகுப்பு திட்டமும் (PTRS) கல்வித் துறையின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பதாகக் கூறினார்.

“6,000 மாணவர்களுக்கு உதவி செய்வதில் தொடங்கி, தற்போது 63,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். எம்பிஐ மற்றும் கல்வித் துறையால் இலவசப் பிரத்தியேக வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டம் RM2,000 க்கும் குறைவான வருமானம் கொண்ட குடும்பங்களிலிருந்து பாடங்களில் மோசமான முடிவுகளை பெறும் மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, http://ePTRS.my போர்ட்டலைப் பலப்படுத்தி, ஆசிரியர்களின் திறன்களை வலுப்படுத்துவதன் மூலம் இத்திட்டத்தை வெற்றிகரமாக 7 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது.


Pengarang :