சிலாங்கூரே 2018 ஆம் ஆண்டு முதல் அதிகபடி உள்நாட்டு உற்பத்தி, வருவாய் மற்றும்  இருப்புள்ளது.  

ஷா ஆலம், 2 ஆகஸ்ட்: சிலாங்கூர் பொருளாதாரம் 2018 முதல் தொடர்ந்து செழித்து வளர்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) மிகப்பெரிய பங்களிப்பாளராக சிலாங்கூர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது.

மாநில இருப்பு 2008 க்குப் பிறகு மிகப்பெரிய எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. அதே நேரத்தில், டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் நிர்வாகத்தின் போது அவரது முன்னோடியுடன் ஒப்பிடும்போது கடன் அளவும் கணிசமாகக் குறைந்துள்ளது.

சிறப்பை மேம்படுத்தும் வகையில், மாநிலத்தை சிறந்த நிலைக்குக் கொண்டுவர முதல் சிலாங்கூர் திட்டம் (RS-1) அறிமுகப்படுத்தப்பட்டது. சிலாங்கூர் மக்களைப் பெருமைப்படுத்தும் முக்கியமான மாநில பொருளாதார சாதனைகள்:

மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிலாங்கூரின் பங்களிப்பு 25.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.

2022 ல் மாநில கையிருப்பு RM3.7 பில்லியனாக அதிகரித்துள்ளது. நான்கு ஆண்டுகளில் RM1 பில்லியன் அதிகரிப்பு .

(2018 முதல்)  2022ல் மாநில வருவாய் RM2.533 பில்லியன், இலக்கு RM2.05 பில்லியனைத் தாண்டியது.

2022 இல் RM9,983 இன் சராசரி வருமானம், தேசிய அளவில் RM6,338 யை விட அதிகமாகும்

2019 முதல் 2022 வரை ஆண்டுக்கு 6.5 சதவீதம் வருமான வளர்ச்சி.

வேலையின்மை விகிதம் 2022 ல் 2.9 சதவிகிதம், தேசிய அளவில் 3.6 சதவிகிதத்தை விட குறைவு

2025 வரை ஐந்தாண்டு மேம்பாட்டுத் திட்டமான RS-1 ஐ அமலாக்கம்.

ஆண்டுக்கு RM25 பில்லியன் முதல் 35 பில்லியன் வரை முதலீட்டு இலக்கு அங்கீகரிக்கப்பட்டது

ஆண்டுக்கு 6.5 முதல் 7 சதவிகிதம் ஆண்டு ஜிடிபி வளர்ச்சி இலக்கு

3.5 முதல் 3.8 மில்லியன் தனிநபர்களின் மொத்த வேலை வாய்ப்பு


Pengarang :